இந்தியா

சிஜேபி நிர்வாகிகள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆஜராக டெல்லி போலீஸார் சம்மன்

வேட்டையன்

புதுடெல்லி: கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிர்வாகிகளான சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் ஆஜராகுமாறு டெல்லி போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர். அவர்கள் இருவரும் நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்து.

எஸ்​ஐஆர் விவ​காரத்​தில் தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி வில​கக் கோரி எதிர்க்​கட்​சிகள் நாடு முழுவதும் பல்​வேறு போராட்​டங்​களை நடத்தி வரு​கின்​றன. தலைநகர் டெல்லியில் இந்தப் போராட்டம் தீவிரமடைந்தது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி, சிஜேபி உள்ளிட்டவை ஈடுபட்டன.

இந்தச் சூழலில் தடையை மீறி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட சிஜேபி நிர்வாகிகளான சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்காவை டெல்லி போலீஸார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் நீதிமன்ற உத்தரவின்படி டெல்லியில் உள்ள திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

அதன்பின், தனிநபர் பிணை மற்றும் அமைதிக்கான பிணை பத்திரங்கள் அவர்களது தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதனடிப்படையில் 7 நாள் நீதிமன்ற காவலுக்கு பிறகு அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி சிறப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம்.

போலீஸ் சம்மன்

அவர்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில் டெல்லி ரஜோரி கார்டன் பகுதியில் உள்ள அலுவலகத்தில் இன்று (அக்.22) ஆஜராகுமாறு டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

ஜந்தர் மந்தரில் தடையை மீறி போராடியது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அவர்கள் இருவரது வாக்குமூலத்தையும் பதிவு செய்யும் விதமாக இந்த சம்மனை போலீஸார் அனுப்பி உள்ளதாக தகவல். அதேபோல சிஜேபி-யின் அஜிங்கியா ஷிண்டேவுக்கும் போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT