இந்தியா

பெண் பத்திரிகையாளர் உள்ளிட்ட மூவர் மீது டெல்லி காவல் துணை ஆணை​யர் வன்கொடுமை புகார்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: ஒரு பெண் பத்திரிகையாளர் உள்​ளிட்ட மூவர் மீது டெல்லி காவல் துறை​யின் ஏசிபி விவேக் பகத், வன்கொடுமை புகார் அளித்​துள்​ளார்.

தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாருக்கு எதி​ராக டெல்லி ஜந்​தர்மந்​தரில் அக்​டோபர் 3-ல் போராட்​டம் தொடங்கியது. முதல்நாளில், பாது​காப்​புப் பணியி​லிருந்த காவல் உதவி ஆணை​யர் (ஏசிபி) மீது 2 பெண் பத்​திரி​கை​யாளர்​கள் டெல்லி நாடாளு​மன்ற சாலை காவல் நிலை​யத்​தில் பாலியல் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரணை நடந்து வரு​கிறது.

இச்​சூழலில், இந்த 2 பெண் பத்​திரி​கை​யாளர்​களில் ஒரு​வர் உட்பட 3 பேர் மீது ஏசிபி விவேக் பகத், நாடாளு​மன்ற காவல் நிலை​யத்​தில் கடந்த 13-ம் தேதி புகார் அளித்​துள்​ளார். அதில் ஜந்​தர் மந்​தர் போராட்​டத்​தின்​போது மூவரும் தன்னை சாதி ரீதி​யாக இழி​வுபடுத்​தி​யதுடன் பணிசெய்ய விடா​மல் தடுத்​த​தாகக் கூறி​யுள்​ளார். இதன் அடிப்​படை​யில், எஸ்சி எஸ்டி வன்​கொடுமை சட்​டத்​தின் கீழ் டெல்லி காவல் துறை முதல் தகவல் அறிக்​கை​யைப் பதிவு செய்​துள்​ளது.

இதில் ரோஸி என்ற பெண் செய்​தி​யாளர், செய்தி இணை​யதளம் ஒன்​றோடு தொடர்​புடைய கஜேந்​திர சிங் மற்​றும் அடை​யாளம் தெரி​யாத நபர் ஒரு​வர் ஆகியோர் குற்​றம் சாட்​டப்​பட்​டுள்​ளனர். பட்​டியல் சாதி​யினர் மற்​றும் பழங்​குடி​யினர் (வன்​கொடுமை தடுப்பு) சட்​டத்​தின் கீழும் இந்த வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

தனது சட்​டை​யில் இருந்த பெயரைப் பார்த்த பத்​திரி​கை​யாளர் ரோஸி, தனது சாதி குறித்து இழி​வான கருத்​துகளைக் கூறிய​தாக விவேக் குற்​றம் சாட்​டி​யுள்​ளார். ரோஸி​யின் சக ஊழிய​ரான கஜேந்திர சிங் மற்​றும் பிறர் முன்​னிலை​யில் இந்த வன்​கொடுமை நிகழ்ந்​த​தாக​வும் ஏசிபி விவேக் தெரி​வித்​துள்​ளார்.

ஏசிபி விவேக் மேக்​வால் எனும் பட்​டியல் சாதி சமூகத்​தைச் சேர்ந்​தவர் ஆவார். சம்​பவம் நடந்த அன்று மாலை ரோஸி​யும் அவரது சகாக்​களும் காவல் நிலை​யம் முன் கூடி, தனக்கு எதி​ராகப் போராட்​டத்​தில் ஈடுபட்​டனர். அப்​போது தன்னை ஒரு பாலியல் குற்​ற​வாளி​யாக சித்​தரித்​த​தாக ஏசிபி குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT