சோனியா காந்தி | கோப்புப் படம் 
இந்தியா

குடியுரிமை பெறும் முன்பே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்த விவகாரம்: சோனியாவுக்கு நோட்டீஸ்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய குடியுரிமை பெறு​வதற்கு முன்​பாகவே வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்த்த விவ​காரத்​தில் சோனியா காந்திக்கு டெல்லி நீ​தி​மன்​றம் நேற்று நோட்​டீஸ் அனுப்​பியது.

காங்​கிரஸ் கட்​சி​யின் மூத்த தலை​வர் சோனியா காந்​திக்கு இந்​திய குடி​யுரிமை கடந்த 1983-ம் ஆண்டு வழங்​கப்​பட்​டது. ஆனால், அதற்கு முன்​பே வாக்​காளர் பட்​டியலில் அவரது பெயர் இடம்​பெற்​றது. இதை எதிர்த்து திரி​பாதி என்​பவர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார். இதனை கடந்த செப்​டம்​பர் 11-ல் விசா​ரித்த கீழமை நீதி​மன்​றம், போது​மான ஆதா​ரங்​கள் தாக்​கல் செய்​யப்​பட​வில்லை எனக்​கூறி திரி​பா​தி​யின் மனுவை தள்​ளு​படி செய்​தது.

இந்த நிலை​யில், இந்த விவ​காரம் தொடர்​பாக டெல்லி நீ​தி​மன்​றத்​தில் குற்​ற​வியல் சீராய்வு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இதனை சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே அமர்வு முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி, ‘‘இந்​திய குடி​யுரிமை பெறு​வதற்கு முன்​பாகவே வாக்​காளர் பட்​டியலில் பெயரை சேர்க்க போலி ஆவணங்​களை கொடுத்து மோசடி செய்​த​தாக சோனியா காந்தி மீது குற்​றம்​சாட்​டப்​பட்​டுள்​ளது.

அவர் மீது குற்​ற​வியல் வழக்​குப் பதிவு செய்​யக் கோரி தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள குற்​ற​வியல் சீராய்வு மனுவுக்கு சோனியா காந்தி மற்​றும் டெல்லி காவல் துறை பதிலளிக்க கோரி நோட்​டீஸ் அனுப்ப உத்​தர​விடப்​படு​கிறது’’ என்​றார்​.

இதுகுறித்து காங்​கிரஸ் எம்​.பி.பிரி​யங்கா காந்தி செய்​தி​யாளர்​களிடம் கூறும்போது, “சோனியா காந்தி மீதான குற்றச்சாட்டுகளுக்கு உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? இந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. இந்திய குடியுரிமையை பெற்ற பிறகே எனது தாயார் தேர்தலில் வாக்களித்துள்ளார்.

சோனியாவுக்கு 80 வயதாகி விட்டது. அதன்பின்னரும் ஏன் அவரை குறிவைத்து தாக்குகிறார்கள் என்பதான் புரியவில்லை. நாட்டுக்கு சேவை செய்வதற்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துள்ள அவரை நாம் பாதுகாக்க வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT