இந்தியா

தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கு குறித்து விரைவில் முடிவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற வேண்டும் என்ற தீர்ப்புக்கு மாறாக, தலைமை நீதிபதிக்கு பதிலாக பிரதமரால் பரிந்துரைக்கப்படும் மத்திய அமைச்சரை இடம்பெறச் செய்து 2023-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது, இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்சந்திர சர்மாவின் மகன் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையத்துக்காக ஆஜராகி வருவதால், இந்த வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதி சதீஷ் சந்திர சர்மா விலகியிருக்க வேண்டும். ஆனால் அவர் விசாரணை நடத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வு பரிந்துரை செய்து தீர்ப்பளித்துள்ளார். எனவே, தீர்ப்பை திரும்பப்பெற மனு தாக்கலானது. இம்மனு மீது உரிய முடிவெடுப்போம் என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு நேற்று உறுதியளித்தது.

SCROLL FOR NEXT