இந்தியா

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மீதான நம்பிக்கயில்லா தீர்மானம் மீது கார​சார விவாதம்

அவையை ஜெக​தாம்​பிகா பால் நடத்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்​கள​வை சபாநாயகர் ஓம் பிர்​லா​வுக்கு எதி​ராக எதிர்க்​கட்​சிகளால் கொண்​டு​வரப்​பட்ட நம்​பிக்​கை​யில்லா தீர்மானம் மீது நேற்று கார​சார விவாதம் நடை​பெற்​றது.

நாடாளு​மன்ற பட்ஜெட் கூட்​டத் தொடரில் மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச சபாநாயகர் ஓம் பிர்​லா​அனுமதி வழங்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்​து, ஓம் பிர்லாவுக்கு எதி​ராக காங்​கிரஸ் தலைமையிலான எதிர்க்​கட்​சிகள் சார்​பில் நம்​பிக்​கை​யில்லா தீர்மான நோட்​டீஸ் வழங்​கப்​பட்​டது.

          

இந்த சூழலில் நேற்று அவையை நடத்​திய பாஜக மூத்த எம்​.பி. ஜெக​தாம்​பிகா பால், ஓம் பிர்​லா​வுக்கு எதி​ரான நம்​பிக்​கை​யில்லா தீர்​மான நோட்​டீஸ் மீது 10 மணி நேரம் விவாதம் நடத்த அனு​மதி வழங்​கி​னார். அப்​போது, ஜெக​தாம்​பிகா பால் அவையை நடத்த எதிர்க்​கட்சி எம்​.பி.க்​கள் கடும் எதிர்ப்பு தெரிவித்​தனர்.

இதையடுத்​து, நாடாளு​மன்ற விவ​காரத் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு பேசும்​போது, “மக்​கள​வை சபாநாயகரை நீக்​கக் கோரும் தீர்​மானம் விவாதிக்கப் படும்போது, ஓம் பிர்​லா​வால் நியமிக்கப்பட்ட தலை​வர்​கள் குழு​வில் இடம்​பெற்​றுள்ள ஜெக​தாம்​பிகா பால் அவையை நடத்​தலாம்" என்​றார். இதையடுத்​து, நாடாளு​மன்ற விவ​காரத் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு விவாதத்தை தொடங்கி வைத்து பேசி​னார்.

அப்​போது அவர் கூறும்​போது, “அவை​யில் பேசுவதற்கு யாருடைய அனு​ம​தி​யும் தனக்​குத் தேவை​யில்லை என்று எதிர்க்​கட்​சித் தலைவர் கூறி​யிருந்​தார். பிரதம​ராகவோ, எதிர்க்​கட்​சித் தலை​வ​ராகவோ அல்​லது வேறு எந்த நாடாளு​மன்ற உறுப்​பின​ராகவோ இருக்​கலாம். ஆனால் சபாநாயகரின் அனுமதி இன்றி அவை​யில் யாரும் பேச முடி​யாது.

மேலும் ஒரு முறை (2018-ல்) மக்​களவை​யில் பிரதமரை நோக்கி வந்து அவரை கட்​டிப் பிடித்​து​விட்​டு, பிறகு தனது இடத்​துக்​குத் திரும்​பிச் சென்று சக எம்​.பி.க்​களைப் பார்த்து கண் சிமிட்​டிய ஒரு தலை​வரை (ராகுல்) நான் இது​வரை பார்த்​த​தில்​லை" என்​றார். பின்​னர் பல எம்​.பி.க்​கள் பேசினர். தொடர்ந்து இன்​றும் வி​வாதம் நடை​பெற உள்​ளது. இறு​தி​யில்​ தீர்​மானத்​தின்​ மீது வாக்​கெடுப்​பு நடைபெற உள்​ளது.

SCROLL FOR NEXT