இந்தியா

தாவூத் இப்ராஹிம் கூட்டாளி சலீம் டோலா இந்தியாவுக்கு நாடு கடத்தல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரபல தாதா தாவூத் இப்​ராஹிமின் நெருங்கிய கூட்​டாளி​யான சலீம் டோலா துருக்​கி​யின் இஸ்தான்​புல்​லில் கைது செய்​யப்​பட்​டார். அவரை துருக்கி அரசு நேற்று அதி​காலை இந்​தி​யா​வுக்கு நாடு கடத்​தி​யது.

டெல்​லி, ஆர்​.கே.புரத்​தில் என்​சிஆர்பி அலு​வல​கத்​தில் வைக்​கப்​பட்​டுள்ள டோலா, மும்பை காவல் துறை​யிடம் ஒப்​படைக்​கப்பட உள்​ளார். மும்பை டோங்​ரியைச் சேர்ந்த டோலா, சுமார் 10 ஆண்​டு​களுக்கு முன் இந்​தி​யா​விலிருந்து தப்​பியோடி​னார். வெளி​நாடு​களில் இருந்து பன்​னாட்டு போதைப்​பொருள் வலை​யமைப்பை நடத்தி வந்​தார்.

மும்பை டோங்​ரியை சேர்ந்த ஃபைசல் ஜாவேத் ஷேக், அவரது மனைவி அல்ஃபியா ஃபைசல் ஷேக் ஆகியோ​ரால் கையாளப்​பட்ட போதைப்​பொருள் விற்​பனை வரு​வாய் குறித்த விசா​ரணை​யின்​போது, டோலா​வின் பங்கு வெளிச்சத்​துக்கு வந்​தது. மும்பை போலீஸ் விசாரணையில் மெஃபெட்​ரான் விநி​யோகச் சங்​கிலி மகாராஷ்டி​ரா​வின் சாங்லி மற்​றும் சூரத்​தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் மற்​றும் துருக்கி வரை நீள்​வது கண்டறியப்​பட்​டது.

அங்கு டோலா தனது கூட்​டாளி​கள் மூலம் போதைப் பொருள் கடத்​தலில் ஈடு​படு​வது தெரிய​வந்​தது. கடந்த ஆண்டு இன்​டர்​போல் உதவி​யுடன், டோலா​வின் மகன் தாஹிர், மரு​மகன் முஸ்​தபா முகமது குப்​பா​வாலா ஆகியோரை ஐக்​கிய அரபு அமீரகத்​திலிருந்து அதி​காரி​கள் நாடு கடத்​தி, டோலா​வின் வலை​யமைப்பை பலவீனப்​படுத்​தினர். இந்​நிலை​யில் தற்​போது டோலாவை கைது செய்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT