கோப்புப் படம்

 
இந்தியா

மயானத்தில் எரியும் சிதைகளுக்கு இடையே நடனம்: வாராணசியில் தொடரும் 282 வருட பாரம்பரியம்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்​தரபிரதேசம் வாராணசி​யின் மணி​கர்​ணிகா மயானத்​தில் எரி​யும் சிதைகளுக்கு இடையே இளம்​பெண்​களின் நடன நிகழ்ச்சி நடை​பெற்​றது. இரவு முழு​வது​மான இந்த பாரம்​பரிய நிகழ்ச்சி கடந்த 282 வருடங்​களாகத் தொடர்​கிறது.

உ.பி.​யின் முக்​கியப் புனித நகர​மாக இருப்​பது பனாரஸ் மற்​றும் காசி எனும் வாராணசி. மிக​வும் பழமை​யான நகர​மாகக் கருதப்​படும் இங்கு பல பாரம்​பரி​யங்​களும் கலாச்​சா​ரங்​களும் பல நூற்​றாண்​டு​களாகத் தொடர்​கின்​றன.

          

இதில் ஒன்​றாக தற்​போதைய நவராத்​திரி நாட்​களில் மயான நடனம் இடம் பெற்​றுள்​ளது. வாராணசி​யின் கங்கை கரை​யில் உள்ள மணி​கர்​ணிகா மயானத்​தில் நேற்று முன்​தினம் இரவு 'சைத்ர நவராத்​ரி’ எனும் முக்​கிய நாளில் இது நடை​பெற்​றது.

வாராணசி​யின் கங்கை கரைகளில் உள்ள மயானங்​களில் மிகப் பெரியது மணி​கர்​ணிகா ஆகும். இங்கு 24 மணி நேர​மும் இடை​வி​டா​மல் சிதைகள் வந்து எரி​கின்​றன. இங்கு நடை​பெறும் ஈமச்​சடங்கு ஆன்​மாவுக்கு முக்தி அளிக்​கும் என்ற நம்​பிக்​கையே இதற்கு காரண​மாகும்.

எரி​யும் சிதைகளு​டன் மரண அமைதி நில​வும் இங்கு இரவு முழு​வதும் சலங்கை ஒலி​யுடன் நடனம் தொடர்ந்​தது. இதற்​காக மேடை அமைத்து நகர​வதூக்​கள் என்று அழைக்​கப்​படும் பாலியல் தொழிலா​ளி​கள் நடன​மாடு​கின்​றனர்.

இவர்​களு​டன் திருநங்​கைகளும் இசை நிகழ்ச்​சி​யில் கலந்து கொள்​கின்​றனர். இந்த நிகழ்​வின் பின்​னணி​யில் தங்​களின் அடுத்த பிற​வி, மேம்​பட்​ட​தாக அமை​யும் என்​பது அவர்​களின் நம்​பிக்​கை​யாக உள்​ளது.

கடந்த 382 ஆண்​டு​களாக இந்த வியப்​புக்​குரிய சங்​கமத்​தின் பாரம்​பரி​யம் தொடர்​கிறது. இது வெறும் ஒரு கலைநிகழ்ச்​சி​யாக மட்​டுமின்​றி, ஒரு வகை​யான பிரார்த்​தனை மற்​றும் ஆன்​மிக வழி​பா​டாக​வும் கருதப்​படு​கிறது. இந்த நிகழ்ச்​சி​யில் வாராணசி மட்​டுமின்றி சுற்​றுப்​புற மாவட்​டங்​களில் இருந்து வந்​தும் நடன​மாடு​கின்​றனர்.

மயானங்​களின் காவல​ராக கருதப்​படும் ‘பாபா மசான் நாத்​'துக்​காக ஒவ்​வொரு ஆண்​டும் மூன்று நாள் சிருங்​கார விழா நடை​பெறுகிறது. இதன் இறுதி நாளில் இவர்​கள் நடன​மாடி பாபா மசான் நாத்​துக்கு அஞ்​சலி செலுத்​துகின்​றனர். மயானத்​துக்கு சடலங்​கள் தொடர்ந்து வந்​து​கொண்​டிருந்​தா​லும், அங்கு இசை​யின் தாளத்​துக்கு ஏற்ப நடன​மும் தொடர்ந்​தது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் நிகழ்ச்​சி​யில் கலந்​து​கொண்ட திருநங்​கை​யான பப்பு கூறுகை​யில், “17-ம் நூற்​றாண்​டில், காசியை ஆண்ட மன்​னர் மான்​சிங், இந்த வரலாற்​றுச் சிறப்​புமிக்க படித்​துறை​யில், சுடு​காட்​டின் அதிப​தி​யாக​வும் 'மசான் நாத்' என்​றும் போற்​றப்​படும் சிவபெரு​மானுக்​காக ஒரு ஆலயத்​தைக் கட்​டி​னார். அந்த இடத்​தில் ஒரு இசை நிகழ்ச்​சியை நடத்த அவர் விரும்​பி​னார்.

இதற்கு எந்​தவொரு கலைஞரும் அங்கு வரத் துணி​ய​வில்​லை. அப்​போது வாழ்ந்த பாலியல் தொழிலா​ளி​கள் மட்​டுமே அதற்கு முன் வந்​தனர். கங்கை நதிக்​கரை​யில் அமைந்​துள்ள மசான் நாத்​தின் சன்​ன​தி​யில் அவர்​கள் தங்​கள் நடனத்தை அர்ப்​பணித்​தனர். அந்​தக் காலத்​திலிருந்தே அதே பக்​தி​யுட​னும்​ நம்​பிக்​கை​யுட​னும்​ இந்​த மரபு இன்​று தொடர்​கிறது” என்​றார்​.

SCROLL FOR NEXT