இந்தியா

இந்தியாவிடம் பிரம்மோஸ் ஏவுகணை, ட்ரோன்கள் வாங்க சைப்ரஸ் விருப்பம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​தி​யா​விட​மிருந்து பிரம்​மோஸ் ஏவுகணைகள், காமிகேஸ் ட்ரோன்​கள் வாங்க சைப்ரஸ் விருப்​பம் தெரிவித்துள்ளது.

சைப்​ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்​டோடுலைட்ஸ் சமீபத்​தில் இந்​தியா வந்​தார். அப்​போது இந்​தி​யா​விடம் இருந்து பிரம்​மோஸ் ஏவு​கணை​கள், 'நா​காஸ்த்​ரா-1' மற்​றும் 'ஸ்​கைஸ்ட்​ரைக்​கர்' போன்ற காமிகேஸ் ட்ரோன்​களை​யும் (தற்​கொலைப்​படை ட்ரோன்​கள்) வாங்​கு​வ​தில் சைப்​ரஸ் விருப்​பம் தெரி​வித்​தது. மேலும் தேடு​தல் மற்​றும் மீட்பு பணி​களில் இரு நாடு​களும் இணைந்து செயல்​பட​வும் முடிவு செய்​யப்​பட்​டது.

இந்த ராணுவ ஒப்​பந்​தம் இறுதி செய்​யப்​பட்​டால், துருக்கி அதிபர் ரசிப் தையீப் எர்​டோக​னுக்கு மிகப் பெரிய பின்​னடை​வாக இருக்கும். சைப்​ரஸ் நாட்​டின் வட பகு​தியை நீண்​ட​கால​மாக ஆக்கிரமித்து இருக்​கும் துருக்​கி​யின் பாது​காப்​புக்கு மிகப் பெரிய அச்​சுறுத்​தலாக அமை​யும். இதனால் இந்​தி​யா​விடம் பிரம்​மோஸ் மற்​றும் ட்ரோன்​கள் வாங்க சைப்​ரஸ் முடிவு செய்​துள்​ளது துருக்கியில் பீதியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

பாகிஸ்​தான் மீது இந்​தியா ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கை மேற்​கொண்​டபோது, பாகிஸ்​தானுக்கு துருக்கி நூற்​றுக்​கணக்​கான ட்ரோன்​களை ரகசி​ய​மாக அனுப்​பியது. அவற்றை இந்​திய எல்​லைகள் நோக்கி அனுப்​பியது பாகிஸ்​தான். ஆனால், இந்​திய வான் பாது​காப்பு கருவி​கள் அவற்றை நடு​வானிலேயே சுட்டு வீழ்த்​தின. இந்​தி​யா​வின் பிரம்​மோஸ் ஏவு​கணை பாகிஸ்​தானின் விமான தளங்​களைத் தகர்த்​ததை துருக்கி உட்பட உலக நாடு​கள் நன்கு அறி​யும். இதனால் இந்​திய ஆயுதங்​களை வாங்க சைப்​ரஸ் முடிவு செய்​திருப்​பது துருக்​கிக்​கு பீதி​யை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

SCROLL FOR NEXT