இந்தியா

“டிஎம்சி சார்பில் போட்டியிட ரூ.5 கோடி கேட்டனர்” - கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி புகார்

செய்திப்பிரிவு

கொல்கத்தா: முன்​னாள் இந்​திய கிரிக்​கெட் வீரரும் வங்​காள கிரிக்​கெட் வரலாற்​றில் அதிக ரன்​கள் (10,195 முதல் தர ரன்​கள்) எடுத்​தவரு​மான மனோஜ் திவாரி, மேற்கு வங்​கத்​தில் மம்தா பானர்ஜி அரசில் விளை​யாட்​டுத் துறை இணை அமைச்​ச​ராகப் பணி​யாற்​றி​னார்.

மே.வங்​கத்​தில் சமீபத்​திய சட்​டப்​பேரவை தேர்​தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்ற நிலை​யில் மம்தா பானர்​ஜி​யின் 15 ஆண்டு கால பதவிக்​காலம் முடிவுக்கு வந்​தது. இந்​நிலை​யில் மனோஜ் திவாரி அளித்த பேட்​டி​யில் கூறும்போது, ”திரிண​மூல் காங்​கிரஸின் (டிஎம்சி) படு​தோல்​வியை கண்டு நான் சற்​றும் ஆச்​சரியப்​பட​வில்​லை. ஒரு கட்சி முழு​வதும் ஊழலில் ஈடு​பட்டு எந்​தத் துறை​யிலும் வளர்ச்சி இல்​லாத​போது இவ்​வாறு நடக்​கத்​தான் வேண்​டும்.

சமீபத்​திய தேர்​தலில் பெரும் தொகையை கொடுக்க முடிந்தவர்களால் மட்​டுமே திரிண​மூல் காங்​கிரஸிடம் டிக்​கெட் வாங்க முடிந்​தது. இந்த முறை 70-72 வேட்​பாளர்​கள் டிக்​கெட் பெறுவதற்​காக சுமார் ரூ.5 கோடி செலுத்​தி​யுள்​ளனர். என்​னிட​மும் பணம் கேட்​டார்​கள். ஆனால் நான் கொடுக்க மறுத்​த​தால் எனக்கு ‘சீட்’ வழங்​கப்​பட​வில்​லை” என்றார்.

SCROLL FOR NEXT