கோழிக்கோடு: கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி சார்பில், முதல்வர் பினராயி விஜயன் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: கேரளாவில் ஏழ்மையை முற்றிலும் ஒழிக்க, குடும்ப நல ஓய்வூதியம் ரூ.3,000 ஆக உயர்த்தப்படும். இதன் மூலம் 5 லட்சம் ஏழை குடும்பங்கள், வறுமையிலிருந்து மீள உதவும். மக்களுக்கு முறையாக மருத்துவ வசதிகள்கிடைப்பதை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
எஸ்.டி பிரிவினர், மீனவர்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் நலன்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். மாணவர்கள் படித்து முடித்தவுடன் வேலைக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். வேலைவாய்ப்பு தொடர்புடைய திறன் மேம்பாட்டு பயிற்சிகள் விரிவுபடுத்தப்படும்.
பெண்களுக்கான வேலைவாய்ப்பில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். பெண்களின் பங்களிப்பு 50 சதவீதமாக உயர்த்தப்படும் என்பது உட்பட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.