புதுடெல்லி: மது வாங்குவோரின் வயதைச் சரிபார்க்க நாடு முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறையை உருவாக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு வழக்கறிஞர் யாரும் ஆஜராகாததை கண்ட நீதிபதிகள் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியும் இந்த விவகாரத்தை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லையா என அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
அடுத்த விசாரணையின் போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தினர்.