இந்தியா

டிஎம்சியில் இருந்து விலகிய 20 எம்.பி.க்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மேற்​கு​வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸின் (டிஎம்சி) 20 எம்.பி.க்கள் அந்​தக் கட்​சி​யில் இருந்து வில​கி, தேசிய குடிமக்கள் கட்சி​யில் (என்​சிபிஐ) இணைந்​தனர்.

இதையடுத்து, கட்​சித் தாவல் தடைச் சட்​டத்​தின்​படி இவர்​களைத் தகுதி நீக்​கம் செய்​யக் கோரி மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்லாவிடம் டிஎம்சி சார்பில் மனு அளிக்​கப்​பட்​டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுதொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செய​லா​ளர் அபிஷேக் பானர்ஜி உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்தார். இதையடுத்து, இந்த மனு குறித்து விளக்​கம் அளிக்​கும்​படி 20 எம்.பி.க்​களுக்​கும் நோட்​டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்​தர​விட்டனர்.

SCROLL FOR NEXT