இந்தியா

நாட்டின் இ20 பெட்ரோல் கொள்கை பொருளாதாரத்தைப் பாதிக்கும்: கேஜ்ரிவால் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்​திய அரசின் இ20 பெட்ரோல் கொள்​கை​யால் நாட்டின் பொருளா​தா​ரம் சீர்​குலை​யும் என்று ஆம் ஆத்மி தேசிய ஒருங்​கிணைப்​பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் எச்​சரித்​துள்​ளார்.

மத்​திய அரசின் இ20 பெட்​ரோல் கொள்கை குறித்து பிரதமருடன் பேச ஆம் ஆத்மி நேரம் கேட்​டும் பதில் கிடைக்​க​வில்​லை. இதனால் அக்​கட்​சி, எத்​த​னால் குறித்த மக்​கள் கூட்​டங்​களை​யும், கையெழுத்து இயக்​கத்​தை​யும் நடத்​தி​யது. இ20 பெட்​ரோல் அச்சத்தால் மக்​கள் பெட்​ரோல் கார்​களைத் தவிர்த்து சிஎன்​ஜி, மின்​சார வாக​னங்​களுக்கு மாறு​வ​தால் டீலர்​களிடம் கார்​கள் தேங்கி​யுள்​ள​தாக ‘எக்​ஸ்’ பதி​வில் கூறப்​பட்​டிருந்​தது.

அதற்​குப் பதிலளித்த அர்​விந்த் கேஜ்ரி​வால், மக்​கள் பெட்​ரோல் வாக​னங்​களை வாங்​கு​வதை நிறுத்​தி​விட்​ட​தால் அரசு எத்​த​னால் கொள்​கையை உடனடி​யாகத் திரும்​பப் பெற வேண்​டும் என்​றும், இல்​லை​யெனில் நாட்​டின் பொருளா​தா​ரம் கடுமை​யாகப் பாதிக்கும் என்​றும் எச்​சரித்​துள்​ளார்.மேலும், சாதாரண பெட்ரோல் அல்​லது இ20 பெட்​ரோலைத் தேர்ந்​தெடுக்​கும் உரிமையை மக்​களுக்கு வழங்க வேண்​டும் என்​றும், இ20-ஐ ஊக்​குவிக்க அதைக் குறைந்த விலை​யில் விற்க வேண்​டும் என்​றும் அவர் கோரி​யுள்​ளார்.

இ20 பெட்​ரோல் பாதுகாப்பானது

இதற்கிடையில் இ20 பெட்​ரோலில் ஈரம், குளோரைடு கலந்துள்ளதாக வெளி​யான தகவல்​களை அடுத்​து, எண்​ணெய் நிறு​வனங்​கள் நாடு முழு​வதும் நடத்​திய ஆய்​வில் பெட்​ரோல் தரம் சரி​யாக இருப்​பது உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. எனவே, பொது​மக்கள் எவ்​வித அச்​ச​முமின்றி இ 20 பெட்​ரோலை நம்​பிக்​கை​யுடன் பயன்​படுத்​தலாம் என்று மத்​திய பெட்​ரோலிய அமைச்​சகம் தெரிவித்​துள்​ளது.

SCROLL FOR NEXT