இந்தியா

ரூ.1 வாடகையில் மாநகராட்சி திருமண மண்டபம்: ஆந்திராவில் செப்.16-ல் திறப்பு

என். மகேஷ்குமார்

நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்​லூர் மாநகராட்சி ஏசி வசதியுடன் கூடிய சொகுசு திருமண மண்டபத்தை கட்​டி​யுள்​ளது. இதன் 24 மணி நேர வாடகை ரூ.1 ஆக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

இக்​கால​கட்​டத்​தில் திருமண மண்டபங்​களின் வாடகை பல லட்சமாக உள்​ளது. இடத்​திற்​குத் தகுந்​தாற்​போல் வெறும் 24 மணி நேரத்​திற்கு ரூ.5 லட்​சம் முதல் ரூ.50 லட்​சம் வரை வாடகை மட்டுமே கொடுக்க வேண்​டி​யுள்​ளது. இதுதவிர மேடை, முகப்பு அலங்​காரம், சமையல் பாத்​திரங்​களுக்​கான தனி வாடகை என லட்​சக்​கணக்​கில் செல​வாகிறது.

இத்​தகைய மண்​டபங்​களில் திரு​மணம் செய்ய நடுத்தர வர்க்கத்தினரே அஞ்​சும் நிலை​யில், ஏழைகளால் நினைத்​துப் பார்க்​கக் கூட முடி​யாத சூழ்​நிலை உள்​ளது. இதனைக் கருத்​தில் கொண்​டு, நெல்​லூர் மாநக​ராட்​சி​யினர் ஏழைகள் மற்​றும் நடுத்தர வர்க்​கத்​தினர் தங்​களின் பிள்​ளை​களுக்​கான திரு​மணச் செலவை வெகு​வாகக் குறைக்க தீர்​மானித்​தனர்.

அதன்​படி, நெல்​லூரில் சுமார் 2 ஏக்​கர் பரப்​பள​வில், 5,000 பேர் பங்கேற்​கும் வகை​யில் பிரம்​மாண்​ட​மான திருமண மண்​டபத்தை நெல்​லூர் மாநக​ராட்​சி​யினர் ரூ.1.40 கோடி செல​வில் கட்டி முடித்துள்​ளனர்.

அதில் ஏசி அறை​கள், பளிங்​குத் தரைகள், பரந்த கார் பார்க்​கிங் வசதி, குடிநீர் மற்​றும் மின்​சார வசதி​கள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்​ளன. இந்த திருமண மண்​டபத்​திற்கு ஒரு நாள் (24 மணி நேரம்) வாடகை​யாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே நிர்ணயிக்​கப்​பட்​டுள்​ளது. இத்​திருமண மண்​டபத்தை வரும் செப்​.16-ம் தேதி அமைச்​சர் நா​ராயணா திறந்து வைக்க உள்ளார்​ என்பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT