இந்தியா

2019 மக்களவைத் தேர்தலில் சர்ச்சை பேச்சு: ஆசம் கானுக்கு 2 ஆண்டு சிறை

செய்திப்பிரிவு

ராம்பூர்: கடந்த 2019-ம் ஆண்டு மக்​கள​வைத் தேர்​தல் நடைபெற்றது. அப்​போது ராம்​பூர் தொகு​தி​யில் சமாஜ்​வாதி கட்சியின் சார்பில் கட்​சி​யின் மூத்த தலை​வர் ஆசம் கான் போட்டியிட்​டார். அப்போது நடந்த தேர்​தல் பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் ஆசம் கான் பேசும்போது, ‘‘மாவட்ட ஆட்​சி​யர் ஒரு சம்​பளம் வாங்கும் ஊழியர். இந்த ஆட்​சி​யரைக் கண்டு பயப்​படத் தேவையில்​லை’’ என்று பேசியிருந்​தார்.

மேலும், பகுஜன் சமாஜ் கட்​சித் தலை​வர் மாயா​வ​தி​யின், காலணி​களை உயர் அதி​காரி​கள் சுத்​தம் செய்​வதை புகைப்​படங்​களில் பார்த்​த​தாகக் கூறி மற்​றொரு சர்ச்​சையைக் கிளப்​பி​னார். இதையடுத்​து, தேர்​தல் நடத்தை விதி​களின் கீழ் காவல் நிலை​யத்​தில் அவர் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது.

பின்​னர் போலீ​ஸார் ராம்​பூர் நீதி​மன்​றத்​தில் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​தனர். வழக்கு விசா​ரணை​யின் போது, பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் பதிவு செய்​யப்​பட்ட வீடியோ காட்​சிகள், ஆவண சான்​றுகள் மற்​றும் நேரில் பார்த்த சாட்​சிகளின் வாக்​குமூலங்​களை அரசுத் தரப்பு நீதி​மன்​றத்​தில் சமர்ப்​பித்​தது.

இந்த வழக்​கில் விசா​ரணை முடிந்​ததையடுத்​து, ஆசம் கான் குற்​ற​வாளி என நீதி​மன்​றம் அறி​வித்​தது. இதன்​படி, அவருக்கு 2 ஆண்டு சிறை தண்​டனை​யும் ரூ.5 ஆயிரம் அபராத​மும் விதிக்​கப்​படு​வ​தாக நீதி​மன்​றம் தெரி​வித்​துள்​ளது. ஆசம் கான் இப்​போது ராம்​பூர் தொகுதி எம்​எல்​ஏ-​வாக உள்​ளார். தேர்​தல் சட்​டங்​களின்​படி 2 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதிக்​கப்​பட்​டால், தேர்ந்​தெடுக்​கப்​பட்ட மக்​கள் பிர​தி​நி​தி​கள் தகுதி நீக்​கம் செய்​யப்​படு​வார்​கள். எனவே, இந்​தத்​ தீர்ப்​பு மிக முக்​கிய​மான​தாகக்​ கருதப்​படுகிறது.

SCROLL FOR NEXT