இந்தியா

டெல்லியில் 42 நாட்களுக்கு கட்டுமான பணிகளுக்கு தடை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் குளிர் காலத்​தில் காற்று மாசுவின் தாக்​கம் தீவிர​மாக இருக்​கும் என்​ப​தால் அப்​போது கடைபிடிக்க வேண்​டிய மாசு தடுப்பு நடவடிக்​கைகள் தொடர்​பாக பல முக்​கிய முடிவு​களை அரசு இப்​போ​திலிருந்தே எடுத்து வருகிறது.

அந்த வகை​யில் வரு​கிற டிசம்​பர் 10-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி வரை 42 நாட்​களுக்கு டெல்​லி​யில் கட்​டு​மான பணி​களுக்கு முழு​மை​யாக தடை விதிக்​கப்​படு​வ​தாக முதல்​வர் ரேகா குப்தா அறி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “​முந்​தைய ஆண்​டு​களில் குளிர் காலத்​தில் படிப்​படி​யான மாசுக்கட்டுப்​பாட்டு நடை​முறை அமலில் இருந்​த​போ​தி​லும் திரைமறை​வில் கட்​டு​மான பணி​கள் நடந்து வந்​தன.

எனவே இந்த ஆண்டு கட்​டுப்​பாடு​கள் கடுமை​யாக்​கப்​படும். 500 சதுரடிக்கு அதி​க​மான கட்​டுமான தளங்​கள் அனைத்​தும் டஸ்ட் போர்​டல் 2.0 மற்​றும் ஏஐ கேம​ராக்கள் மூலம் கண்​காணிக்கப்படும். நோட்​டீஸ், எச்​சரிக்கை, அபராதம் என நடவடிக்கைகள் தொடரும்” என தெரிவிக்​கப்​பட்டுள்​ளது.

SCROLL FOR NEXT