இந்தியா

வந்தே மாதரம் பாடலை அவமதித்ததற்கு காங்கிரஸ் வெட்கப்பட வேண்டும்: அமித் ஷா விமர்சனம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வந்தே மாதரம் பாடலை அவம​தித்​ததற்கு காங்​கிரஸ் வெட்​கப்பட வேண்​டும் என மத்​திய அமைச்​சர் அமித் ஷா தெரிவித்​துள்​ளார்.

முன்​னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்​பா​யின் நினைவு தினம் நேற்று அனுசரிக்​கப்​பட்​டது. இதையொட்​டி, ராஜஸ்​தான் மாநிலம் சித்​தோர்​காரில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற மத்திய உள்துறை அமைச்​சர் அமித் ஷா, வாஜ்​பா​யின் சிலையைத் திறந்து வைத்​தார். இந்​நிகழ்ச்​சி​யில், முதல்வர் பஜன்லால் சர்மா உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

இந்​நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் அமித் ஷா பேசி​ய​தாவது: காங்​கிரஸ் கட்​சி​யின் தலை​மையகத்​தில் சனிக்​கிழமை வந்தே மாதரம் தேசியப் பாடல் பாடப்​பட்​டது. அப்​போது, காங்​கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்​தி, அப்​பாடலை நிறுத்​து​மாறு கட்​சித் தலை​வரைக் கேட்​டுக் கொண்​டார். இதை நாம் அனை​வரும் டிவியில் பார்த்​தோம். சோனியா ஜி, 140 கோடி மக்​கள் உங்​களைப் பார்த்​துக் கொண்​டிருக்​கிறார்​கள்.

நீங்​கள் செய்​துள்ள இந்த பாவத்தை நாட்டு மக்​கள் ஒரு​போதும் மன்​னிக்க மாட்​டார்​கள். வந்தே மாதரம் பாடலை பாதி​யில் நிறுத்து​வதை யாராவது கனவில் கூட காண முடி​யு​மா? இதற்​காக காங்கிரஸ் கட்​சி​யினர் வெட்​கப்பட வேண்​டும். காங்​கிரஸ் கட்சி வாக்கு வங்கி பேராசை​யால் வந்தே மாதரத்தை மறந்​து​விட்​டது. தேசி​யப் பாடலுக்கு ஏற்​பட்ட அவம​திப்​புக்கு காங்​கிரஸ் கட்சி நாட்டு மக்களிடம் மன்​னிப்பு கேட்க வேண்​டும். இவ்​வாறு அவர் தெரிவித்தார்.

டெல்​லி​யில் உள்ள காங்​கிரஸ் கட்​சி​யின் தலை​மையக​மான இந்திரா பவனில் சனிக்​கிழமை சுதந்​திர தின விழா நடைபெற்றது. இதில் வந்தே மாதரம் பாடல் இசைக்​கப்​பட்​ட​போது சோனியா காந்தி சைகை காட்டி எதிர்ப்பு தெரி​வித்​ததாக பாஜக குற்​றம் சாட்​டியது. இது தொடர்​பான வீடியோ காட்​சிகளை​யும் சமூக வலை​தளங்​களில் பகிர்ந்​தது.

சோனியா மீது புகார்

ஆனால் இந்​தக் குற்​றச்​சாட்டை காங்​கிரஸ் மறுத்​ததுடன், கார்​கேவுக்கு இருக்கை வழங்​கும்​படி சோனியா சைகை காட்​டிய​தாக தெரி​வித்​துள்​ளது. மேலும், அந்த நிகழ்ச்​சி​யில் வந்தே மாதரத்​தின் முழு வடிவம் பாடப்​பட்​ட​தாக தெரி​வித்​துள்​ளது. இதற்​கிடையே, சோனியா மீது வழக்​குப்​ப​திவு செய்​யும்​படி கோரி, பாஜக சார்​பில் காவல்​துறை​யில்​ மனு தாக்​கல்​ செய்​யப்​பட்​டுள்​ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT