புதுடெல்லி: உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜேந்திர பால் கவுதம் நேற்று கூறியதாவது: கடந்த 2 மாதங்களாக உத்தர பிரதேசத்தில் தொகுதிப் பங்கீடு பணிகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா, கே.சி. வேணுகோபால் மற்றும் நானும் இ்ப்பணிகளை கவனித்து வருகிறோம்.
இத்தேர்தலில், காங்கிரஸ் குறைந்தபட்சம் 150 தொகுதிகளில் போட்டியிடும். சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதால், 50% தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸுக்கு உரிமை உள்ளது. சமாஜ்வாதி்யுடனான தொகுதிப் பங்கீடு வரும் அக்டோபர் மாதத்தில் இறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.