இந்தியா

ராகுல் நிகழ்ச்சியில் பங்கேற்க யூடியூப் பிரபலங்களுக்கு பணம் வழங்கும் காங்கிரஸ்: ஆடியோ ஆதாரத்துடன் பாஜக குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி மகாராஷ்டிரா​வின் புனே நகரில் இன்று நடை​பெறும் நிகழ்ச்சியில் பங்​கேற்​கிறார். இதில் வினாத்​தாள் கசிவு, வேலை​வாய்ப்​பின்மை, கல்வி கட்டண உயர்வு உள்​ளிட்ட விவ​காரங்​கள் குறித்து சுமார் 10,000 மாண​வியருடன் அவர் கலந்​துரை​யாட உள்ளார்.

இந்த சூழலில் ராகுல் காந்​தி​யின் புனே நிகழ்ச்​சி​யில் பங்​கேற்க யூடியூப், சமூக வலைதள பிரபலங்​களுக்கு காங்​கிரஸ் சார்​பில் பணம் வழங்​கப்​படு​கிறது என்று பாஜக பகிரங்​க​மாக குற்​றம் சாட்டி உள்​ளது. இதுதொடர்​பான ஆடியோ ஆதா​ரத்​தை​யும் அந்த கட்சி வெளி​யிட்டு இருக்​கிறது. மகா​ராஷ்டி​ராவை சேர்ந்த பெண் சமூகவலைதள பிரபலத்​தை, சாந்​தனு என்ற நபர் அண்​மை​யில் மொபைல்​போனில் தொடர்பு கொண்​டார்.

ராகுல் காந்​தி​யின் புனே நிகழ்ச்​சி​யில் அந்த பெண் பிரபலம் பங்​கேற்க அழைப்பு விடுத்த சாந்​தனு, அதற்​காக ரூ.25,000 பணம் வழங்​கு​வ​தாக உறுதி அளித்​தார். மொபைல் போனில் இரு​வர் இடையி​லான ஆடியோ உரை​யாடலை பாஜக நேற்று தனது சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்​டது. அதோடு வெளி​யிடப்​பட்ட பதி​வில், “ராகுல் காந்​தி​யின் தலைமை மிக​வும் பலவீன​மாக இருக்​கிறது. இதனால் பணம் கொடுத்து கூட்​டம் சேர்க்​கப்​படு​கிறது” என்​று தெரிவிக்​கப்​பட்​டு உள்​ளது.

SCROLL FOR NEXT