டி.கே.சிவகுமார்

 
இந்தியா

க‌ர்நாடக இடைத்தேர்தலில் காங். வெற்றி பெறும்: துணை முதல்வர் டி.கே.சிவகுமார் நம்பிக்கை

இரா.வினோத்

பெங்களூரு: கர்​நாட​கா​வில் 2 தொகு​தி​களுக்கு நடை​பெறும் இடைத்​தேர்​தலில் காங்​கிரஸ் வெற்றி பெறும் என்று அம்​மாநில துணை முதல்​வர் டி.கே.சிவகு​மார் தெரி​வித்​தார்.

கர்​நாட​கா​வில் பாகல்​ கோட்​டை, தாவணகெரே தெற்கு ஆகிய இரு தொகு​தி​களுக்கு வரு​கிற 9-ம் தேதி இடைத்​தேர்​தல் நடை​பெறுகிறது. இதில் ஆளும் காங்​கிரஸ் சார்​பில் உமேஷ் மேத்தி (பாகல்​கோட்​டை), சமர்த் மல்​லி​கார்​ஜூன் (தாவணகெரே தெற்​கு) ஆகியோரை களமிறக்​கி​யுள்ள நிலை​யில், பாஜக சார்​பில் வீரபத்​ரையா சரடிமத் (பாகல்​கோட்​டை), சீனி​வாசா தாசகரியப்பா (தாவணகெரே தெற்​கு) ஆகியோர் களமிறக்​கப்​பட்​டுள்​ளனர். முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் மஜத, பாஜக வேட்​பாளர்​களை ஆதரிப்​ப​தாக அறி​வித்​துள்​ளது. இதனால் காங்​கிரஸ் பாஜக இடையே கடும் போட்டி ஏற்​பட்​டுள்​ளது.

          

காங்​கிரஸூம் பாஜக​வும் நேருக்கு நேர் மோது​வ​தால் காங்​கிரஸ் வேட்​பாளர்​களை ஆதரித்து முதல்​வர் சித்​த​ராமை​யா, துணை முதல்​வர் டி.கே.சிவகு​மார், அமைச்​சர்​களும், பாஜக வேட்​பாளர்​களை ஆதரித்து முன்​னாள் முதல்​வர்​கள் எடியூரப்​பா, பசவ​ராஜ் பொம்​மை, மாநில தலை​வர் விஜயேந்​திரா உள்​ளிட்​டோர் தீவிர பிரச்​சா​ரம் மேற்​கொண்​டுள்​ளனர்.

இந்​நிலை​யில் துணை முதல்​வர் டி.கே.சிவகு​மார் நேற்று பாகல்​கோட்​டை​யில் தீவிர பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: எங்​கள‌து ஆட்​சி​யில் அமல்​படுத்​தப்​பட்ட இலவச திட்​டங்​களால் ஏழை எளிய மக்​கள் மிக​வும் பயனடைந்​துள்​ளனர். நாங்​கள் செல்​லும் இடங்​களில் எல்​லாம் மக்​கள் மகிழ்ச்​சி​யோடு வரவேற்​கின்​றனர். அவர்​களின் முகத்​தில் தென்​படும் புன்​னகையே தேர்​தல் முடிவை சொல்லி விடு​கிறது.

இந்த இரு தொகு​தி​களி​லும் காங்​கிரஸ் வேட்​பாளர்​கள் வெற்றி பெறு​வது உறு​தி​யாகி​விட்​டது. பாஜக முன்​பை​விட குறை​வான வாக்​கு​களைப் பெற்று தோல்வி அடை​யும். இந்த இரு தொகு​தி​களும் காங்​கிரஸின் கோட்டை என்​பது மீண்​டும் நிரூபணம் ஆகும். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

SCROLL FOR NEXT