இந்தியா

கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி காங்கிரஸ் கட்சி ஜூன் 30 முதல் நாடு தழுவிய போராட்டம்

செய்திப்பிரிவு

அகமதாபாத்: இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு வினாத்​தாள் முன்​கூட்​டியே கசிந்​ததால் மறு​தேர்வு நடத்தப்பட்​டது.

இது தொடர்​பாக காங்​கிரஸ் மூத்த தலை​வர் சதேஜ் பாட்​டீல், அகமதா​பாத்​தில் நேற்று நிருபர்​களிடம் கூறிய​தாவது: “நீட் நுழைவுத் தேர்வை ஆண்​டு​தோறும் சுமார் 23 லட்​சம் பேர் எழுதுகின்​றனர். இந்த தேர்​வில் பல்​வேறு மோசடிகள் நடைபெறுகின்​றன.

நீட் தேர்வை நடத்​திய தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) குறித்து உயர்​நிலை விசா​ரணை நடத்​தப்பட வேண்​டும். வினாத்​தாள் மோசடி​யில் தொடர்​புடைய என்​டிஏ அதி​காரி​களை நீதி​யின் முன்பு நிறுத்த வேண்​டும். நீட் வினாத்​தாள் கசிவு, முறைகேடுகளுக்கு பொறுப்​பேற்று மத்​திய கல்வி அமைச்​சர் தர்மேந்​திர பிர​தான் பதவி விலக வேண்​டும்.

இதை வலி​யுறுத்தி ஜூன் 30ம் தேதி முதல் நாடு தழு​விய போராட்டம் நடத்​தப்​படும். மாணவர்​களின் குரல் என்ற பெயரில் 28 முக்​கிய நகரங்​களில் 40 நாட்​கள் தொடர் போராட்​டங்​கள் நடைபெறும். இறு​திக் கட்​ட​மாக “டெல்லி சலோ” போ​ராட்​டம் ஆகஸ்ட் 9ம் தேதி நடத்​தப்​படும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT