காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

 
இந்தியா

டெல்லியில் கார்கே தலைமையில் கூடியது காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

மோகன் கணபதி

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் புதுடெல்லியில் கூடியது. கட்சி சார்பில் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர் மட்ட அமைப்பு என்பதால், இன்றைய கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான இந்திரா பவனில் இன்று கூடியுள்ள இந்தக் கூட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஹரிஷ் ராவத், சல்மான் குர்ஷித், ராஜீவ் சுக்லா, அபிஷேக் மனு சிங்வி, சசி தரூர், அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

தற்போதைய அரசியல் சூழல், காங்கிரஸ் கட்சி அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், குறிப்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் விபி ஜி ராம் ஜி திட்டத்தை எதிர்ப்பதற்கான உத்தி உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால் அது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT