காக்​ரோச் ஜனதா கட்சி நிறு​வனர் அபிஜீத் தீப்கே

 
இந்தியா

கல்வி அமைச்சருக்கு எதிராக போராட காக்​ரோச் கட்​சி அழைப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சிபிஎஸ்இ மற்​றும் நீட் தேர்வு முறை​கேடு​கள் தொடர்பாக டெல்​லி​யில் நடத்​தப்​பட​வுள்ள அமை​திப் போராட்டத்திற்​கான அடுத்​தகட்ட திட்​டங்​களை, ஆன்​லைன் இயக்க​மான கரப்​பான் பூச்சி ஜனதா கட்சி (காக்​ரோச் ஜனதா கட்சி) நிறு​வனர் அபிஜீத் தீப்கே நேற்று வெளி​யிட்​டுள்​ளார்.

தற்​போது அமெரிக்​கா​வில் மாணவ​ராக இருக்​கும் அவர், ஜூன் 6ம் தேதி இப்​போ​ராட்​டத்​திற்​காக இந்​தியா திரும்ப உள்​ள​தாக அறிவித்​துள்​ளார். இது குறித்து சமூக ஊடகங்​களில் வீடியோ பதிவில் அவர் கூறி​யுள்​ள​தாவது: வினாத்​ தாள் கசிவு காரண​மாக நீட் தேர்வு எழு​திய மாணவர்​கள் தற்​கொலை செய்​து ​கொண்ட சம்பவங்​களுக்​கும், லட்​சக் ​கணக்​கான மாணவர்​களின் கடின உழைப்பு வீணடிக்​கப்​பட்​டதற்​கும் பொறுப்​பேற்​று, தர்​மேந்​திர பிரதான் உடனடி​யாகப் பதவி விலக வேண்​டும்.

இதற்​காக போ​ராட்​டம் நடத்​து​வதற்​காக, ஜூன் 6ம் தேதி, சனிக்கிழமை காலை நான் டெல்லி வர முடிவு செய்​துள்​ளேன். நீங்கள் அனை​வரும் என்னை விமான நிலை​யத்​திற்கு வந்து சந்தியுங்​கள். நாம் அனை​வரும் அங்​கிருந்து நாடாளு​மன்ற வீதி காவல் நிலை​யத்​திற்​குச் சென்​று, ஜந்​தர் மந்​தரில் அமை​தி​யான முறை​யில் போராட்​டம் நடத்​து​வதற்​கான அனு​ம​தி​யைக் கோருவோம்.

நாம் அனை​வரும் ஒன்​றிணைந்து குரல் கொடுத்​தால், அவர்​கள் கண்​டிப்​பாகச் செவி​சாய்த்தே ஆக வேண்​டும். எனது இந்த நடவடிக்​கைகளால் நான் கைது செய்​யப்​படலாம் என்று எனது நண்​பர்​களும் குடும்​பத்​தினரும் அச்​சமடைந்​துள்​ளனர். நமது நாடு இன்​னும் ஒரு ஜனநாயக நாடாகவே நீடிக்​கிறது. அமை​தி​யான முறை​யில் போராட நமக்கு அனு​மதி கிடைக்​கும் என்​றும் நான் நம்பு​கிறேன். இவ்​வாறு தீப்​கே தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT