இந்தியா

போராட்ட அறிவிப்பு எதிரொலி: சிஜேபி நிர்வாகி அசுதோஷ் ரங்கா கைது

அசாம் முதல்வருக்கு அபிஜித் திப்கே கண்டனம்

செய்திப்பிரிவு

குவாஹாட்டி: இந்​திய தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி வில​கக் கோரி போ​ராட்​டத்​தில் ஈடுபட உள்​ள​தாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) அறி​வித்​துள்​ளது. இந்நிலையில், முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக அக்கட்சியின் இணை ஒருங்​கிணைப்​பாளர் அசுதோஷ் ரங்கா கைது செய்யப்​பட்​டார்.

அசாம் மாநிலத்​தில் கரப்​பான் பூச்சி ஜனதா கட்​சி​யின் முதலா​வது மண்டல தொண்​டர்​கள் கூட்​டம் நேற்று நடை​பெறும் என அறிவிக்கப்​பட்​டிருந்​தது. ஆனால், அதற்கு முன்​பாகவே அக்கட்சியின் இணை ஒருங்​கிணைப்​பாளர் அசுதோஷ் ரங்கா உள்ளிட்ட பல தலை​வர்​கள் மற்​றும் தொண்​டர்​களை அம்​மாநில காவல் துறை​யினர் கைது செய்து தடுப்​புக் காவலில் வைத்​தனர்.

அசுதோஷ் ரங்கா வெளி​யிட்ட வீடியோ​வில், “அசாம் மாநிலப் பள்ளி​களின் நிலை​மை, மனித தவறுகளால் ஏற்​படும் வெள்​ளப் பெருக்கு போன்ற பிரச்​சினை​களை நாங்​கள் அம்​பலப்​படுத்​தி​விடு​வோம் என்​ப​தால் அசாம் முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பயந்து கொண்டு எங்​களைக் கைது செய்​து​விட்​டார்.

அத்​துடன் எங்​கள் உறுப்​பினர்​களை​யும் அவர் மிரட்​டி​யுள்​ளார். ஆனால், இந்த மண்​ணின் மக்​களை எளி​தில் பயமுறுத்​தி​விட முடியாது” என்று கூறி​யுள்​ளார். காவல் துறை​யின் இந்த நடவடிக்கைக்கு, அசாம் முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு சிஜேபி நிறு​வனர் அபிஜித் திப்கே கடும் கண்​டனம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT