இந்தியா

மேற்கு வங்க நந்திகிராம் இடைத்தேர்தலில் முதல்வர் சுவேந்து அதிகாரி உதவியாளரின் தாயார் போட்டி

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்​கு​வங்​கத்​தில், முதல்​வர் சுவேந்து அதிகாரியின் கொலை செய்​யப்​பட்ட தனி உதவி​யாளரின் தாயார், நந்திகிராம் சட்​டப்​பேர​வைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்​கப்​பட்​டுள்​ளார்.

சமீபத்​தில் நடை​பெற்ற மேற்கு வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், பாஜக முதல்​முறை​யாக ஆட்​சி​யைப் பிடித்​ததைத் தொடர்ந்​து, மே 6-ம் தேதி சுவேந்து அதி​காரி முதல்​வ​ராக பதவி​யேற்​றார். சுவேந்து பதவி ஏற்பு நிகழ்ச்​சிக்கு 3 நாட்​களுக்கு முன்பு அவரது தனி உதவி​யாள​ராக இருந்த சந்​திர​நாத் ராத் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார்.

கடந்த தேர்​தலில் முதல்​வர் சுவேந்து அதி​காரி நந்​தி​கி​ராம், பவானிபூர் ஆகிய இரு தொகு​தி​களி​லும் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றார். அவர் நந்​தி​கி​ராம் தொகு​தி​யில் தனது எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​தார்.

இதைத் தொடர்ந்​து, வரும் அக்​.6-ம் தேதி​யன்று நந்​தி​கி​ராம் தொகு​தி​யில் இடைத்​தேர்​தல் நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், முதல்​வர் சுவேந்து அதி​காரி​யின் முன்​னாள் தனி உதவி​யாளர் சந்​திர​நாத் ராத்​தின் தாயார் ஹசி​ராணி ராத் நந்​தி​கி​ராம் தொகு​தி​யின் பாஜக வேட்​பாள​ராக வேட்​பாள​ராக அறிவிக்​கப்​பட்​டுள்​ளார்.

நந்​தி​கி​ராம் தொகு​தி​யில் ஹசி​ராணி ராத் வேட்பு மனு தாக்​கல் செய்​வதற்கு முன்பு அவருக்கு ஆதர​வாக, முதல்​வர் சுவேந்து அதிகாரி பிரச்​சா​ரம் மேற்​கொள்ள வாய்ப்​பு இருப்​ப​தாகக்​ கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT