இந்தியா

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி டெல்லியில் இன்று சிஜேபி காலவரையற்ற போராட்டம்

13 விரைவு ரயில்கள் ரத்து, 57 மெட்ரோ நிலையங்களை மூட முடிவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி வில​கக் கோரி கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் டெல்​லி​யில் இன்று கால​வரையற்ற போராட்​டம் தொடங்கப்பட உள்​ளது.

நீட் வினாத்​தாள் கசிவை கண்​டித்து சிஜேபி சார்​பில் கடந்த ஜூன், ஜூலை​யில் டெல்லி ஜந்​தர் மந்​தரில் மிகப்​பெரிய போராட்​டம் நடத்​தப்​பட்​டது. இதன்​காரண​மாக மத்​திய கல்வி அமைச்​சர் பதவியில் இருந்து தர்​மேந்​திர பிர​தான் வில​கி​னார். இந்த சூழலில் எஸ்​ஐஆர் விவ​காரம் தொடர்​பாக தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்கு​மார் பதவி விலக வேண்​டும். இல்​லை​யென்​றால் அக்டோபர் 10-ம் தேதி முதல் டெல்​லி​யில் கால​வரையற்ற போராட்டம் தொடங்​கப்​படும் என்று சிஜேபி அறி​வித்​தது.

இதைத் தொடர்ந்து டெல்​லி​யில் பலத்த பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு உள்​ளன. டெல்லி காவல் துறையைச் சேர்ந்த 15,000 போலீ​ஸாரும், மத்​திய பாது​காப்​புப் படைகளை சேர்ந்த 23,000 வீரர்​களும் குவிக்​கப்​பட்டு உள்​ளனர். ஒட்​டுமொத்​த​மாக 38,000 வீரர்​கள் டெல்​லி​யில் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்டு உள்​ளனர். நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் இருந்து டெல்​லிக்கு இயக்​கப்​படும் 13 விரைவு ரயில்​கள் ரத்து செய்​யப்​பட்டு உள்​ளன.

கிழக்கு ரயில்வே நிர்​வாக​மும் சில விரைவு ரயில்​களை ரத்து செய்​திருக்​கிறது. வெளி​மாநிலங்​களில் இருந்து டெல்​லிக்கு வரும் பேருந்​துகள் தீவிர​மாக கண்​காணிக்​கப்​படு​கின்​றன. டெல்லி மற்றும் புறநகர்ப் பகுதி விடு​தி​கள், ஓட்​டல்​களில் தங்​கி​யிருப்​போர் குறித்து விசா​ரணை நடத்​தப்​படு​கிறது. டெல்​லியை ஒட்​டிய அண்டை மாநிலங்​களின் எல்​லைகளில் தீவிர சோதனை நடத்தப்படு​கிறது. டெல்​லி​யின் 57 மெட்ரோ ரயில் நிலை​யங்​கள் இன்று முழு​மை​யாக மூடப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது.

போராட்​டத்​தில் பங்​கேற்​கும் சிஜேபி தொண்​டர்​களை தடுப்பு காவலில் வைக்க திருமண மண்​டபங்​கள், மைதானங்​கள் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்டு உள்​ளன. முன்​வரிசை பாது​காப்பு பணியில் ஈடு​படும் போலீ​ஸாரின் உடைகளில் கேமரா பொருத்தப்​பட்டு இருக்​கிறது. சிஜேபி அமைப்​பின் 10,000 நிர்வாகிகள் தடுப்பு காவலில் வைக்​கப்​பட்டு உள்​ளனர்.

போராட்​டத்​துக்கு அனு​மதி இல்லை

டெல்லி காவல் துறை இணை ஆணை​யர் நுபுர் பிர​சாத் நேற்று கூறும்​போது, “போ​ராட்​டம் நடத்த 10 நாட்​களுக்கு முன்பே மனு அளிக்க வேண்​டும். ஆனால் மிக குறுகிய காலத்​தில் சிஜேபி மனு அளித்​திருக்​கிறது. சட்​டம், ஒழுங்கு காரண​மாக போராட்​டம் நடத்த அனு​மதி வழங்​கப்​பட​வில்​லை" என்று தெரி​வித்​தார்.

டெல்​லி​யில் நில​வும் அசா​தாரண சூழல் காரண​மாக பள்​ளி, கல்லூரி​களில் இன்று ஆன்​லைன் வாயி​லாக வகுப்​பு​கள் நடத்தப்படும் என்று பெரும்​பாலான கல்வி நிறு​வனங்​கள் அறிவித்து உள்​ளன. ஜந்​தர் மந்​தரின் பல்​வேறு பகு​தி​களில் ஒலிபெருக்​கி​கள் அமைக்​கப்​பட்டு உள்​ளன. இந்த வளாகத்தில்யாரும்​ ஒன்​றுகூட வேண்​டாம்​ என்​று ஒலிபெருக்​கி​கள்​ மூலம்​ தொடர்ச்​சி​யாக அறி​விப்​பு வெளியிடப்​படுகிறது.

SCROLL FOR NEXT