புதுடெல்லி: சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் இந்தியா வந்துள்ளனர். சர்வதேசத் துறை துணை அமைச்சர் சன் ஹையான் தலைமையிலான இக்குழுவினர் நேற்று முன்தினம் டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்தனர்.
அங்கு பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் தலைமையிலான பிரதிநிதிகளை சந்தித்தனர். பாஜக மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விரிவாக விவாதித்தனர்.
இக்குழுவில் இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபெய்ஹாங்கும் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் சீன கம்யூனிஸ்ட் கட்சிப் பிரதிநிதிகள் நேற்று காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்று அதன் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபலை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.