இந்தியா

நாட்டில் முதல் முறையாக பெங்களூரு மத்திய சிறையில் குழந்தைகள் பராமரிப்பு மையம்

இரா.வினோத்

பெங்களூரு: பெங்​களூரு மத்​திய‌ சிறை​யில் தண்​டனை கைதி​களாக இருக்​கும் பெண்​களின் கைக்​குழந்​தைகள், எந்த குற்​ற​மும் செய்​யாத நிலை​யிலும் தவிக்​கும் நிலை ஏற்​படு​கிறது.

இதனை கருத்​தில் கொண்டு கர்​நாடக குழந்​தைகள் பாது​காப்பு இயக்​குநரகம் மத்​திய சிறை​யில் பெண் கைதி​கள் அடைக்​கப்​பட்​டுள்ள பகு​தி​யில், நாட்டிலேயே முதல் முறையாக குழந்​தைகள் பராமரிப்பு மையத்தை உரு​வாக்​கி​யுள்​ளது.

இதுகுறித்து கர்​நாடக குழந்​தைகள் பாது​காப்பு இயக்​குநரகத்​தின் இயக்​குநர் சி.​வி. சினேகா கூறிய​தாவது: குழந்​தைகளின் எதிர்​காலத்தை கருத்​தில் கொண்டு இந்த மையத்தை தொடங்​கி​யுள்​ளோம். தற்​போது 9 குழந்​தைகள் உள்ள நிலை​யில், அவர்​களுக்கு 2 ஆசிரியர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இந்த ஆசிரியர்​கள் குழந்​தைகளுக்கு எழுத்​துக்​கள், எண்​கள், பாட்​டு​கள், நற்​பண்​பு​கள் உள்​ளிட்​ட​வற்றை கற்று கொடுப்​பார்​கள்.

குழந்​தைகளுக்கு 6 வயது நிறைவடைந்​தவுடன், குடும்​பத்​தினர் பராமரிக்க முன்​வ​ரா​விட்​டால், தொண்டு நிறு​வனங்​களின் உதவியை நாடு​கிறோம். தற்​போது உள்ள 9 குழந்​தைகளில், 3 பேர் வெளி​நாட்​டினர். மற்​றவர்​கள் வெளி​மாநிலங்​களை சேர்ந்​தவர்​கள் ஆவர்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT