இந்தியா

சிறை​யில் குழந்​தை பெற்றெடுப்பது வேதனையானது: நீடா கான் வழக்கில் நீதிமன்றம் கருத்து

செய்திப்பிரிவு

நாசிக்: மகா​ராஷ்டி​ரா​வின் நாசிக் நகரில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்​தில் பெண் ஊழியர்​களுக்கு மூத்த அதி​காரி​கள் பாலியல்​ தொல்லை கொடுத்​த​தாக​ புகார்​ எழுந்​தது.

குறிப்​பாக மூத்த அதி​காரி​யாக பணி​யாற்​றிய நீடா கான், பெண் ஊழியர்​களை மத மாற்​றத்​துக்கு தூண்​டிய​தாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும் பாலியல் அத்​து​மீறலில் ஈடு​பட்ட மூத்த அதி​காரி​களுக்கு அவர் உடந்​தை​யாக இருந்​த​தாக​வும் கூறப்பட்​டது.

இது தொடர்​பாக நாசிக் போலீ​ஸார் வழக்குப் பதிவு செய்து நீடா கான் உள்ளிட்ட பலரை கைது செய்​தனர். தற்போது நீடா கான் 5 மாத கர்ப்​பிணி​யாக உள்​ளார். இதை முன்​னிறுத்தி நாசிக் விசாரணை நீதி​மன்​றத்​தில் அவர் ஜாமீன் கோரி​னார்.

இந்த மனுவை கடந்த 6ம் தேதி விசா​ரித்​த நீதிபதி கே.ஜி.ஜோஷி, நீடா கானுக்கு ஜாமீன் வழங்​கினார். ஜாமீன் உத்​தர​வில் நீதிபதி கே.ஜி.ஜோஷி கூறிய கருத்​துகள் தற்​போது வெளி​யாகி உள்​ளன. “பக​வான் கிருஷ்ணர் சிறை​யில் பிறந்​தார். சிறை​யில் குழந்தையை பெற்​றெடுப்​பது மிக​வும் வேதனை​யானது. நீடா கானின் கரு​வில் இருக்​கும் குழந்​தை​யின் நலனை கருத்​தில் கொண்டே அவருக்கு ஜாமீன் வழங்​கப்​படு​கிறது” என்​று நீதிப​தி கே.ஜி.ஜோஷி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT