இந்தியா

ம.பி.யில் பொது சிவில் சட்டம்: முதல்வர் மோகன் யாதவ் உறுதி

செய்திப்பிரிவு

போபால்: மத்திய பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மோகன் யாதவ் பேசியதாவது: ம.பி. சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத்தொடரில் பொது சிவில் சட்ட மசோதாவை மாநில அரசு அறிமுகப்படுத்தும். இதுதொடர்பான சட்டம் அமலுக்கு வரும் போது ஒரு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு மட்டுமே மாநிலத்தில் வசிப்பதற்கான உரிமை இருக்கும்.

இங்குள்ள முஸ்லிம் சகோதரிகளும் நமது சகோதரிகள்தான். பொது சிவில் சட்டத்தில் முத்தலாக் நடைமுறைக்கு இடமில்லை. குடிமக்களிடையே எந்தப் பாகுபாடும் இருக்கக் கூடாது என்பதால் இந்தச் சட்டத்தை ம.பி.யில் கொண்டு வருகிறோம். சட்டப்பேரவையின் வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன் ஜெகதீஷ்பூரில் நடைபெறும் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படும். இவ்வாறு மோகன் யாதவ் பேசினார்.

SCROLL FOR NEXT