இந்தியா

வேட்பாளர்களை விலைக்கு வாங்கிவிட்டார் மம்தா: ஹுமாயூன் கபீர் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

முர்ஷிதாபாத்: எங்​கள் கட்​சி​யின் வேட்​பாளர்​களை விலைக்கு வாங்​கி​விட்​டார் மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி என்று ஆம் ஜனதா உன்​னாயன் கட்​சி (ஏஜே​யுபி) தலை​வர் ஹுமாயூன் கபீர் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

மேற்கு வங்க சட்​டப் பேர​வைக்கு நேற்று முதல்​கட்​ட​மாக 152 தொகு​தி​களுக்கு வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. நேற்று நடை​பெற்ற வாக்​குப்​ப​தி​வின்​போது ஏஜே​யுபி கட்​சித் தலை​வர் ஹுமாயூன் கபீர் முர்​ஷி​தா​பாத் மாவட்​டம் நவோடா சட்​டப் பேர​வைத் தொகு​திக்​குட்​பட்ட ஷிப்​நகர் கிராம வாக்​குச்​சாவடிக்​குச் சென்​றார்.

அப்போது அவரை திரிண​மூல் காங்​கிரஸ் தொண்​டர்​கள் முற்றுகையிட்டு ஆர்ப்​பாட்​டம் நடத்​தினர். இதுகுறித்து அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “எங்​கள் கட்​சி​யைச் சேர்ந்த 27 வேட்​பாளர்​களை முதல்​வர் மம்தா பானர்ஜி விலை கொடுத்து வாங்​கி​விட்​டார். ஒவ்​வொரு வேட்​பாள​ருக்​கும் ரூ.9 லட்​சம் முதல் ரூ.30 லட்​சம் வரை கொடுத்​துள்​ளார். நாங்​கள் முதலில் 142 தொகு​தி​களில் போட்​டி​யிடு​வ​தாக இருந்​தோம். 27 வேட்​பாளர்​களை வாங்​கிய​தால் தற்​போது 115 தொகு​தி​களில் மட்​டுமே போட்டியிடு​கிறோம்​” என்​றார்​ ஹுமாயூன் கபீர்

SCROLL FOR NEXT