தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

 
இந்தியா

தேர்தல் முறைகேடுகள், வன்முறைகளை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

செய்திப்பிரிவு

கொல்கத்தா: தேர்தல் முறைகேடுகள் மற்றும் வன்முறைகளை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழுவினர், மேற்கு வங்கத்தில் தேர்தல் தயார்நிலை குறித்து நேற்று கொல்கத்தாவில் உயர்மட்ட ஆய்வை மேற்கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் தலைமை தேர்தல் ஆணையர் கூறியதாவது: தேர்தல் காலங்களில் நிகழும் வன்முறைகள் மற்றும் முறைகேடுகள் மீது பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை கடைபிடிக்கப்படும். தேர்தலின் புனித தன்மையைச் சிதைக்கும் எந்தவொரு செயலையும் ஆணையம் ஏற்காது. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்கான சூழல் உறுதி செய்யப்படும்.

          

தூய்மையான பட்டியல் வாக்காளர் பட்டியலின் நம்பகத் தன்மையை உறுதி செய்வதில் ஆணையம் உறுதியாக உள்ளது. தூய்மையான வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதே எங்களின் முதன்மை நோக்கம். இதில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறினார்.

இருப்பினும், சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கையின் போது மேற்கு வங்கத்தில் அடையாளம் காணப்பட்ட சுமார் 60 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவது அல்லது சரி பார்க்கப்படுவதில் நிலவும் குழப்பங்களுக்கு தீர்வு காண்பது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் நேரடியாக எந்த பதிலையும் அளிக்கவில்லை. குறிப்பாக, நிலுவையில் உள்ள இந்த பெயர்களைச் சரி பார்க்க முறையான காலக்கெடு எதையும் அவர் குறிப்பிடாதது அரசியல் வட்டாரத்தில் விவா தங்களை கிளப்பியுள்ளது.

SCROLL FOR NEXT