இந்தியா

எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையரை இடைநீக்கம் செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம் முடிவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: எஸ்ஐஆர் விவ​காரத்​தில் தலைமைத் தேர்​தல் ஆணையர் ஞானேஷ் குமாரை இடை நீக்​கம் செய்​ய உச்ச நீதிமன்றம் மறுத்​துள்​ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரிய மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘‘ஞானேஷ் குமாரை இடைநீக்​கம் செய்​யும் விவ​காரத்​தில் ஒரு தரப்பு கோரிக்​கையை வைத்தோ அல்​லது செய்​தித்​தாள் செய்​தி​களை அடிப்​படை​யாகக் கொண்டோ இடைக்​கால உத்​தரவை பிறப்​பிக்க முடி​யாது. இந்த விவ​காரத்​தில் தேர்​தல் ஆணை​யம், சம்​பந்​தப்​பட்ட தரப்​பினரின் பதிலைப் பெற வேண்​டும்.

தேர்​தல் ஆணை​யத்​தின் முடிவு​கள் சட்​டத்​திற்கு உட்​பட்டே எடுக்கப்​பட்​ட​தாக நீதி​மன்​றம் கருதுகிறது. சட்​டத்தை மீறி முடிவுகள் எடுக்​கப்​பட்​டிருப்​பது தெரிய​வந்​தால், அவற்றை ரத்து செய்​வது உள்​ளிட்ட அடுத்​தகட்ட நடவடிக்​கைகளை உச்ச நீதிமன்றம் எடுக்கும்’’ என்று தெரி​வித்​தனர். இந்திய தேர்​தல் ஆணை​யம், தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்​தல் ஆணை​யர்​கள் சுக்​பீர் சிங் சாந்து, விவேக்​ ஜோஷி ஆகியோர்​ பதில் அளிக்​க நோட்​டீஸ்​ பிறப்பித்​து உத்​தர​விட்​டனர்​.

SCROLL FOR NEXT