இந்தியா

குடகில் யானைகள் சண்டையில் சிக்கி சென்னை பெண் உயிரிழப்பு

இரா.வினோத்

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் குடகில் காவிரி ஆற்​றில் குளித்துக் கொண்​டிருந்த யானை​களுக்கு இடையே ஏற்​பட்ட சண்டை​யில் சிக்கி சென்​னையை சேர்ந்த சுற்றுலா பயணி ஜாய்சி உடல் நசுங்கி உயி​ரிழந்​தார். கணவரின் கண் முன்​னால் நிகழ்ந்த இந்த சம்​பவத்​தின் வீடியோ வெளி​யாகி அதிர்ச்​சியை ஏற்படுத்​தி​யிருக்​கிறது.

சென்னை பல்​லா​வரத்தை சேர்ந்த ஜாய்சி (33), தனது கணவர் மற்றும் குழந்​தை​யுடன் கர்​நாடக மாநிலம் குடகிற்கு சுற்​றுலா சென்​றார். இங்கு நேற்று பிற்​பகல் 2 மணி​யள​வில் மடிகேரியை அடுத்​துள்ள துபாரே யானை​கள் முகா​முக்கு சென்​றனர். அங்கு 10 க்​கும் மேற்​பட்ட யானை​கள் காவிரி ஆற்​றில் குளித்​துக் கொண்டிருந்​தன. இதனைக் கண்டு சுற்​றுலா பயணி​கள் மகிழ்ந்தனர்.

அப்​போது மார்த்​தாண்​டா, கஞ்​சன் ஆகிய இரு யானை​கள் ஒன்றையொன்று தாக்​கின. இந்த யானை​களுக்கு இடையே சிக்கிய‌ ஜாய்சி கீழே விழுந்​தார். அரு​கி​லிருந்த அவரது கணவர் கையில் குழந்​தையை வைத்​துக்​கொண்​டு, மனை​வியை மீட்க தீவிர முயற்சி செய்​தார். ஆனாலும் அவரை மீட்க முடிய​வில்​லை. யானை​கள் சண்​டை​யில் படு​காயமடைந்த ஜாய்சி சம்பவ இடத்திலேயே பரி​தாப​மாக உயி​ரிழந்​தார்.

கையில் குழந்​தை​யுடன் மனை​வியை யானை​களிடம் இருந்து மீட்க போராடிய கணவரின் வீடியோ சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி பெரும் அதிர்​வலைகளை ஏற்​படுத்தி வரு​கிறது. இதுகுறித்து கர்​நாடக வனத் துறை அமைச்​சர் ஈஸ்​வர் கந்த்ரே கூறுகை​யில், ''உயி​ரிழந்த சுற்​றுலா பயணி​யின் குடும்​பத்​தினருக்கு கர்​நாடக அரசின் சார்​பில் ஆழ்ந்த இரங்​கலை தெரிவித்து கொள்​கிறேன்.

இந்த சம்​பவம் குறித்து விரி​வான விசா​ரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். உயி​ரிழந்த பெண்​ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு சொந்த ஊருக்கு கொண்டு செல்ல உதவுமாறு மாவட்ட நிர்​வாகத்​துக்கு உத்​தர​விட்​டுள்​ளேன். சுற்றுலா பயணி​கள் எக்​காரணம் கொண்​டும் யானை​களை தொட​வோ, உணவுப் பொருட்​கள் ஊட்​டவோ கூடாது. எப்​போதும் விலங்​கு​களிட​மிருந்து பாது​காப்​பான தூரத்தை கடைப்​பிடிக்​க வேண்​டும்​'' என தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT