புதுடெல்லி: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் ஆன்லைன் படிவம் 6-ல் சேர்க்கப்பட்டிருந்த கூடுதல் சிறப்புத் தீவிர திருத்த (எஸ்ஐஆர்) உறுதிமொழிப் பிரிவை தேர்தல்ஆணையம் நீக்கியுள்ளது.
எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த மாற்றம் உடனே அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம், அ்ங்கு் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர்கள், 1960-ம் ஆண்டின் வாக்காளர்கள் பதிவு விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்ட 'படிவம் 6'-ஐ மட்டும் இனி சமர்ப்பித்தால் போதுமானது.