ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
அமராவதி: ஆந்திர மாநிலம் அமராவதியில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் அவர் பேசியதாவது:
நம் வாழ்க்கையில் இலட்சியத்தோடு வீறுநடை போட வேண்டும். இந்தியர்களுக்கும், உலகளவில் வாழும் அனைத்துத் தெலுங்கு மக்களுக்கும் எனது 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் நாடு சுதந்திரம் பெற, இந்தத் தெலுங்கு மண்ணில் பிறந்த தியாகிகள் பலர் போராடியுள்ளனர். பலரது தியாகத்தின் பலனே இன்றைய சுதந்திர இந்தியா. இதனை நாம் என்றென்றும் மறக்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.