இந்தியா

ரூ.16,350 கோடி இரும்பு ஆலை பணியை தொடங்கினார் சந்திரபாபு

என். மகேஷ்குமார்

கடப்பா: கடப்பா மாவட்​டம், ஜம்​மல​முடுகு மண்​டலம், சுண்​ணப்பு ராள்​ளபல்லி எனும் இடத்​தில் ரூ.16,350 கோடி​யில் இரும்பு தொழிற்​சாலை அமைக்​கப்​பட​ உள்​ளது. இதற்​கான திட்​டப்​பணி​களை முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்று தொடங்கி வைத்​தார்.

மேலும், காணொலி மூலம் விஜயநகரம் மாவட்​டம், ஜிந்​தால் தொழில் பூங்​காவை திறந்து வைத்து முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு பேசி​ய​தாவது:

இரும்பு தொழிற்​சாலை திட்டப் பணிகளை தொடங்கி வைத்​ததன் மூலம் ராயலசீ​மா​வில் புதிய அத்​தி​யா​யம் தொடங்கி உள்​ளது. ராயலசீமா என்​றால் வறட்சி பூமி அல்ல. தண்​ணீரின் ஊற்று ராயலசீ​மா. கடந்த ஆட்​சி​யில் உயிரற்ற நில​மாக இருந்த இங்கு தற்போது தண்​ணீர் ஊற்றி துளிர்க்க வைத்​துள்​ளோம்.

தற்​போது தொழிற்​சாலைகள், வேலை வாய்ப்​பு​கள், முதலீடு​கள் என ராயலசீமா மாவட்​டங்​கள் பிஸி​யாகி விட்​டன. இங்கு 1,100 ஏக்​கர் நிலத்தை தொழிற்​சாலைகளுக்​காக வழங்கி உள்​ளோம். இங்கு இரண்டு சீசனில் 2 மில்​லியன் டன் இரும்பு உற்​பத்தி செய்​யப்​படும். இவ்​வாறு முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு பேசி​னார்.

இந்​நிகழ்ச்​சி​யில் மத்​திய அமைச்​சர் நி​வாச வர்​மா, பாஜக மாநில தலை​வர் மாதவ், ஜம்​மலமடுகு எம்​எல்ஏ ஆதி​நா​ராயண ரெட்​டி உட்​பட பலர்​ பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT