இந்தியா

தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற 3 நாள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர்: மத்திய அரசு ஆலோசனை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தொகுதி மறு​வரையறை மசோ​தாவை நிறை​வேற்​று​வதற்​காக, 3 நாள் நாடாளு​மன்ற சிறப்​புக் கூட்​டத் தொடரை கூட்​டு​வது குறித்து மத்​திய அரசு பரிசீலித்து வரு​கிறது.

நாடாளு​மன்ற மக்​களவை மற்​றும் மாநிலங்​களவை​யில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி பெரும்​பான்​மை​யுடன் இருந்​தா​லும், தொகுதி மறு​வரையறை உள்​ளிட்ட திருத்த மசோ​தாக்​களை நிறை​வேற்​றும் போது இந்​திய அரசி​யலமைப்​பின் 369-வது பிரி​வின் கீழ் ஒட்​டுமொத்த நாடாளு​மன்ற உறுப்​பினர்​களில் 3-ல் இரண்டு பங்கு உறுப்​பினர்​களின் ஆதரவு அவசி​யம்.

இந்​நிலை​யில், தொகுதி மறு​வரையறை மசோதா கடந்த ஏப்​ரலில் நடை​பெற்ற நாடாளு​மன்​றக் கூட்​டத் தொடரில் தோல்வி அடைந்​தது. இந்​நிலை​யில், இந்த மசோ​தாவை நிறை​வேற்​று​வதற்​காக நாடாளு​மன்ற சிறப்​புக் கூட்​டத் தொடரை நடத்த மத்​திய அரசு முடிவு செய்​துள்​ளது.

இதற்​காக ஆகஸ்ட் 16, 17, 18-ம் தேதி​களில் சிறப்பு கூட்​டத்​தொடர் இருக்​கும் என்று நாடாளு​மன்ற வட்​டாரங்​கள் தெரி​வித்​தன. இதில் தொகுதி மறு​வரையறை மசோ​தா, மகளிர் இடஒதுக்​கீட்டு திருத்த மசோ​தாக்​கள் தாக்​கல் செய்​யப்​படும் எனத் தெரி​கிறது. இதுதொடர்​பாக காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகளுக்கு மத்​திய அரசு தகவல் தெரி​வித்​துள்​ள​து. ஆனால், சமாஜ்​வாதி உள்​ளிட்ட கட்​சிகளு​டன் கலந்​தாலோ​சித்து விட்டு விரை​வில் பதில் அளிப்​ப​தாகக் காங்​கிரஸ் கட்சி தெரி​வித்​துள்​ளது.

கடந்த ஏப்​ரலில் நடை​பெற்ற இந்த மசோதா மீதான வாக்​கெடுப்​பின் போது 528 எம்​.பி.க்​கள் மக்​களவை​யில் இருந்​தனர். அதன்​படி, 352 பேரின் வாக்​கு​கள் இருந்​தால் மட்​டுமே மசோதா நிறை​வேறும் நிலை இருந்​தது. ஆனால், மசோ​தாவுக்கு ஆதர​வாக 298 வாக்​கு​களும், எதி​ராக 230 வாக்​கு​களும் விழுந்​தன. இதனால் மசோதா தோல்வி அடைந்​தது.

இந்த முறை மசோதா தோல்வி அடை​யாமல் இருக்க எதிர்க்​கட்​சிகள் மத்​தி​யில் ஒரு​மித்த கருத்தை ஏற்​படுத்த மத்​திய அரசு முடிவு செய்​துள்​ளது. தற்​போது மக்​களவை​யில் மத்​திய அரசுக்​குப் போது​மான பலம் உள்​ளன. அதே​போல் மாநிலங்​களவை​யில் 3-ல் 2 பங்கு மெஜாரிட்​டிக்​குத் தேவை​யான எம்​.பி.க்​களின் எண்​ணிக்​கை​யைத் தேசிய ஜனநாயகக் கூட்​டணி நெருங்​கி​யுள்​ளது. எனவே, இம்​முறை 2 மசோ​தாக்​களும் நிறை​வேறும் என தேசிய ஜனநாயகக் கூட்​டணி அரசு நம்​பிக்​கை​யுடன் உள்​ளது.

SCROLL FOR NEXT