கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் சுந்தரபன்ஸ் பகுதியில் நடைபெற்ற யானை மற்றும் புலிகள் பாதுகாப்பு திட்ட கூட்டத்தில் பங்கேற்ற மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் புபேந்தர் யாதவ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
அசாமில் ரயில் மோதி 8 யானைகள் இறந்தது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய அரசு கூறியுள்ளது. ரயில்வே பாதைகளையொட்டி யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க மாநிலங்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ரயில்வே அதிகாரிகளும், வனத்துறையினருடன் ஒருங்கிணைந்து செயல்படும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.