இந்தியா

மறுபதிவு செய்யாமல் பிற மாநில வாகனங்களை 3 ஆண்டு அனுமதிக்க மத்திய அரசு திட்டம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பணி நிமித்​தம் காரண​மாக பிற மாநிலங்​களுக்கு செல்​லும் வாகன உரிமை​யாளர்​கள், மறு பதிவு செய்​யாமல் தங்கள் வாக​னத்தை பயன்​படுத்​தும் காலத்தை 3 ஆண்​டாக நீட்டிக்க மத்​திய சாலை போக்​கு​வரத்து துறை அமைச்சகம் விருப்பம் தெரி​வித்​துள்​ளது.

பணி​யிட மாற்​றம் மற்​றும் ஒப்​பந்​தப் பணி காரண​மாக பலர் வேறு மாநிலங்​களுக்கு செல்​லும் நிலை ஏற்​படு​கிறது. மத்​திய அரசு பணி மற்​றும் பாது​காப்பு துறை​யில் பணி​யாற்​றும் சிலர் 2 அல்​லது 3 ஆண்​டு​களுக்கு ஒரு முறை பணி​யிட மாற்​றம் பெற்று வேறு மாநிலங்​களுக்கு செல்​கின்​றனர்.

தற்​போதுள்ள விதி​முறைப்​படி ஒரு மாநிலத்​தில் பதிவு செய்யப்பட்ட வாக​னத்​தை, வேறு மாநிலத்​தில் ஓராண்​டுக்கு மேல் பயன்​படுத்​தி​னால் அதன் உரிமை​யாளர் புதிய மாநிலத்​தில் வாகனத்தை மறு பதிவு செய்ய வேண்​டும். இது பணி நிமித்​தம் காரண​மாக வேறு மாநிலங்​களுக்கு அடிக்​கடி செல்​பவர்​களுக்​கும், ஒப்​பந்​தப் பணியை முடித்து விட்டு மீண்​டும் சொந்த மாநிலம் திரும்​புபவர்​களுக்​கும் சிரமத்தை ஏற்​படுத்​துகிறது.

இதை எளி​தாக்​கு​வதற்​காக, வேறு மாநிலங்​களில் மறு பதிவு செய்யாமல் வாக​னங்​களை 3 ஆண்​டு​கள் வரை பயன்​படுத்​தும் வகை​யில் மோட்​டார் வாகன சட்​டத்​தில் திருத்​தம் கொண்டு வர மத்​திய சாலை போக்​கு​வரத்து அமைச்​சகம், மத்​திய அமைச்சர்கள் கூட்​டத்​தில் கடந்த வாரம் விருப்​பம் தெரி​வித்​தது.

வாக​னங்​களை மறு பதிவே செய்​யாமல் நாடு முழு​வதும் உள்ள அனைத்து மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​களில் பயன்படுத்​தும் வகை​யில் பாரத் சீரிஸ் (தேசி​ய அளவி​லான) பதிவு முறைக்​கும், மத்​திய அரசின் தற்​போதைய நடவடிக்​கை மேலும்​ வலுசேர்க்​கும்​ என கூறப்​படுகிறது.

SCROLL FOR NEXT