இந்தியா

100 நாள் ஆகியும் முடித்து வைக்கப்படாத நாடாளுமன்ற கூட்டத்தொடர்: தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவு திரட்டும் மத்திய அரசு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: நாடாளு​மன்ற மழைக்​காலக் கூட்​டத்​தொடரின் கடைசி அமர்வு கடந்த ஆகஸ்ட் 13-ல் நடை​பெற்​றது. 100 நாட்களைக் கடந்​தும் இக் கூட்​டத்​தொடர் முறை​யாக முடித்து வைக்​கப்​பட​வில்லை. இது நாடாளு​மன்ற வரலாற்​றிலேயே மிக நீண்ட அளவாகும். இதற்கு முன்பு 2008-ல் 87 நாள் இடைவெளிதான் சாதனையாக இருந்​தது.

இதன் பின்​னணி​யில் இருக்​கும் தொகுதி மறு​வரையறை மசோதா மற்​றும் மகளிருக்​கான இட ஒதுக்​கீடு குறித்த விவாதங்​கள் தேசிய அரசி​யலில் தீவிரமடைந்​துள்​ளன. இந்த கூட்​டத்​தொடரை முடிவுக்குக் கொண்​டுவ​ராததற்கு ஒரு முக்​கியக் காரணம் உள்ளது. விதி​களின்​படி, முறை​யாக முடிவுக்​குக் கொண்டுவரப்படாத ஒரு கூட்​டத்​தொடரை, வெறும் மூன்று தினங்கள் முன்​பான அறி​விப்​பிலேயே மீண்​டும் கூட்ட முடியும்.

ஆனால், ஒரு கூட்​டத்​தொடர் முறை​யாக முடிவுக்​குக் கொண்டுவரப்​பட்ட பிறகு, புதிய கூட்​டத்​தொடருக்​கான அறி​விப்பு, குறைந்​தது 2 வார காலம் முன்​னதாக வெளி​யிடப்​பட வேண்​டும். எனவே, கால தாமதத்​தின் பின்​னணி​யில், தொகுதி மறு​வரையறை மசோதாவுக்​கான மூன்​றில் 2 பங்கு பெரும்பான்மைக்காக மத்​திய அரசின் ஆதரவு திரட்​டல் இருப்​பது தெரி​கிறது.

எதிர்க்​கட்​சிகளின் இண்​டியா கூட்​ட​ணி​யி​லிருந்து வெளியேறினாலும், திமுகவும், ஆம் ஆத்மி கட்​சி​யும் காங்​கிரஸின் கருத்​துடன் பெரும்​பாலும் உடன்​படுவ​தாகத் தெரி​கிறது. இருப்பினும், திமுக மற்​றும் இண்​டியா கூட்​ட​ணி​யின் பிற சில கட்சிகளுக்கு, காங்​கிரஸின் நிபந்​தனைகளில் சில மாற்​றுக் கருத்துகள் உள்​ளன. இதன்​படி, 2023-ம் ஆண்டு சட்​டத்​தின் கீழ் பெண்​களுக்கு வழங்​கப்​படும் இட ஒதுக்​கீட்டை, மக்​கள் தொகை கணக்​கெடுப்பு மற்​றும் தொகுதி மறு​வரையறை செயல்​முறை மசோதாவில் சேர்க்​கக் கூடாது என காங்​கிரஸ் வலியுறுத்து​கிறது.

தொகுதி மறுசீரமைப்​புக்​குப் பிறகும் மக்​களவை இடங்​களின் மொத்த எண்​ணிக்​கையை 543 ஆகவே வைத்​திருக்க வேண்​டும். அதை அதி​கரிக்​கக்​கூடாது என்​பது எதிர்க்​கட்​சிகளின் முதல் கோரிக்​கை​யாகும். இதுபோல 2023-ல் நிறைவேறிய மகளிர் இட ஒதுக்​கீடு சட்​டத்தை உடனடி​யாகச் செயல்​படுத்தி, தற்​போதுள்ள 543 இடங்​களில் 182 இடங்​களை (33%) பெண்​களுக்கு ஒதுக்க வேண்​டும் என்​றும் வலியுறுத்​தப்​படு​கிறது.

இந்​தக் கோரிக்​கைகளை ஏற்​றுக்​கொண்​டால், காங்​கிரஸ், திமுக மற்​றும் ஆம் ஆத்மி கட்​சிகள் மசோதாவுக்கு ஆதரவளிக்​கத் தயாராக இருப்​ப​தாக தெரி​கிறது. ஆனால், மத்​திய அரசு இன்​னும் இதற்​குப் பதிலளிக்​க​வில்லை. ஆனால் பெண்​கள் அதி​காரமடைவதைத் தடுக்க காங்​கிரஸ் முயற்​சிப்​ப​தாக மத்​திய அரசு குற்​றம் சாட்​டு​கிறது.

இச்​சூழலில், நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத்​தொடரின் அடுத்த பகுதி டிசம்​பர் 2-ம் வாரத்​தில் கூடும் என்று எதிர்​பார்க்கப்படுகிறது. டிசம்​பர் மாதத்​துக்​குள் இந்த மசோதா நிறைவேற்​றப்​பட வேண்​டும். இல்லை​யெனில், புதிய எல்லைகளின் அடிப்​படை​யில் 2029-ல் வரும் மக்​களவைத் தேர்தலை நடத்​த முடியாது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT