ஜெய் அன்​மோல்

 
இந்தியா

அனில் அம்பானி மகன் மீது சிபிஐ வழக்கு பதிவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தொழில​திபர் அனில் அம்பானி தலை​மையி​லான நிறுவனங்கள் பல வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தவில்லை என வழக்குகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ரிலை​யன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறு​வனம் (ஆர்​எச்​எப்​எல்), யூனியன் பாங்க் ஆப் இந்​தி​யா​வில் (முன்பு ஆந்​திரா வங்​கி) வாங்​கிய ரூ.228 கோடி கடனை முறை​யாக திருப்​பிச் செலுத்​த​வில்லை என கூறப்​படு​கிறது.

இதையடுத்​து, கடந்த 2019-ம் ஆண்டு செப்​டம்​பர் 30-ம் தேதி, இந்​தக் கடனை வாராக் கடனாக வகைப்​படுத்​தி​யது. மேலும் இது தொடர்​பாக யூனியன் வங்கி சார்​பில் சிபிஐ-​யிடம் புகார் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

இதன் அடிப்படையில் சிபிஐ மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், வங்கியில் பெற்ற கடனை உரிய நோக்கத்துக்காக பயன்படுத்தாமல் வேறு வகையில் முறைகேடாக பயன்படுத்தியது தெரியவந்தது.

இதையடுத்​து, ஆர்​எச்​எப்​எல், அதன் இயக்​குநர்​களான அனில் அம்பானி மகன் ஜெய் அன்​மோல், ரவீந்​திரா சரத் சுதாகர் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்​துள்​ளது.

SCROLL FOR NEXT