இந்தியா

கேரளாவில் மதரீதியாக வாக்கு சேகரித்ததாக குருவாயூர் பாஜக வேட்பாளர் மீது வழக்குப் பதிவு

தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: கேரள சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் குருவாயூர் தொகு​தி​யில் போட்​டி​யிடும் பாஜக மூத்த தலைவர்​களில் ஒரு​வ​ரான பி. கோபால​கிருஷ்ணன் மீது மத ரீதி​யாக வாக்கு சேகரித்​த​தாகத் தேர்​தல் ஆணை​யம் வழக்​குப் பதிவு செய்​துள்​ளது.

பாஜக மாநிலத் துணைத் தலை​வ​ரான கோபால​கிருஷ்ணன், தனது தேர்​தல் பிரச்​சா​ரத்​தின்​போது குருவாயூர் தொகு​தி​யில் இந்து மதத்​தைச் சேர்ந்த ஒரு​வரே சட்டபேரவை உறுப்​பின​ராக தேர்வு செய்​யப்பட வேண்​டும் என்று பேசி​யதாகக் கூறப்​படு​கிறது.

          

இது தொடர்​பான வீடியோ சமூக வலை​தளங்​களில் வேகமாகப் பரவியது. அதில் அவர், ‘‘சர்​வ​தேச அளவில் புகழ்​பெற்ற ஆன்​மிகத் தலமான குரு​வாயூரில் கடந்த 50 ஆண்​டு​களாக ஏன் ஒரு இந்து சட்​டப்பேரவை உறுப்​பினராக கூட தேர்ந்​தெடுக்​கப்​பட​வில்​லை? குரு​வாயூரின் புனித மண் மற்​றும் அதன் அடை​யாளத்தை மீண்​டும் மீட்டெடுக்க வேண்​டும்” என்று பேசி​யிருந்​தார்.

இதுகுறித்து மாநிலத் தலை​மைத் தேர்​தல் அதி​காரி ரத்​தன் யு. கேல்​கர் வெளி​யிட்​டுள்ள அதி​காரப்​பூர்வ அறி​விப்​பில், ‘மக்​கள் பிர​தி​நி​தித்​து​வச் சட்​டப் பிரிவு 123 (3) மற்​றும் தேர்தல் நடத்தை விதி​களின் கீழ் கோபால​கிருஷ்ணன் மீது வழக்​குப் பதிவு செய்ய திருச்​சூர் மாவட்ட ஆட்​சி​யருக்கு உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. சாதி அல்​லது மத உணர்வுகளைத்தூண்டி வாக்கு சேகரிப்​ப​தைத் தேர்​தல் நடத்தை விதி​கள் தடை செய்​கின்​றன.

மேலும், வழி​பாட்​டுத் தலங்​களைப் பிரச்​சார மேடை​யாகப் பயன்​படுத்​து​வதும் விதி​மீறலாகும். சர்ச்​சைக்​குரிய அந்த வீடியோ சமூக வலை​தளங்​களில் இருந்து அகற்றப்பட்டுள்ளதுடன், குரு​வாயூர் கோயில் காவல் நிலையத்​தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்​ளது” என்று தெரி​வித்​துள்​ளார்.

மக்​கள் பிரதி​நி​தித்​து​வச் சட்​டத்​தின்​படி, இப்​பிரி​வின் கீழ் குற்​றம் நிரூபிக்​கப்​பட்​டால், தேர்​தல் ரத்து செய்​யப்​படலாம் அல்லது அவர் தேர்​தலில் போட்​டி​யிடு​வ​திலிருந்து தகுதி நீக்​கம் செய்​யப்​படலாம் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT