இந்தியா

சமண கோயில் மசூதியாக மாற்றப்பட்டதாக வழக்கு: ஆதாரங்களை ஏஎஸ்ஐ ஆய்வு செய்ய குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: குஜராத் மாநிலம் பரூச்​சிலுள்ள மலை​யின் உச்​சி​யில் வரலாற்​றுச் சிறப்​புமிக்க ஜாமியா மசூதி உள்​ளது. இதை இந்​திய தொல்​லியல் துறை (ஏஎஸ்ஐ) பாது​காத்து வரு​கிறது.

கடந்த 1909-ம் ஆண்​டின் அரசிதழ் அறி​விப்​பிலும் இது மசூ​தி​யாக பட்​டியலிடப்​பட்​டுள்​ளது. ஆனால், ஒரு சமண வழி​பாட்​டுத் தலமாக இருந்த இதை, டெல்லி சுல்​தான்​களின் மன்​னர் கியாத் உல் தீன் துக்​ளக் படையெடுப்​பின்​போது மசூ​தி​யாக மாற்​றப்​பட்​ட​தாக புகார் எழுந்​துள்​ளது. இது தொடர்​பாக குஜ​ராத் உயர் நீதி​மன்றத்தில் சமண மதத்​தைச் சேர்ந்த 5 பேர் மனு தாக்​கல் செய்திருந்தனர்.

அதில், ‘பரூச்​ நகரில் மசூ​தி​யாக இருக்​கும் 14-ம் நூற்​றாண்​டைச் சேர்ந்த இக்​கட்​டிடத்​தில் சமணர்​களின் கோயில் இருந்​தது. இது சமணர்​களின் சகுனி விஹார் என்ற அமைப்​பின், ‘அஸ்​வ​போத் தீர்த்​தம்’ எனும் பெயரிலான கோயில் ஆகும். எனவே இதற்​குள் ஆய்வு செய்ய உத்​தர​விட வேண்​டும்.

இதன் அடித்​தளத்​தில் 19-வது சமண தீர்த்​தங்​கர​ரான பகவான் மல்லி​நாதரின் சிலை​யும் உள்​ளது. இக்​கோ​யிலை மீண்​டும் நிலைநிறுத்​தி, அந்​தச் சிலையை பாது​காப்​ப​தற்​கான நடவடிக்கைகளை மேற்​கொள்ள வேண்​டும்’ எனக் கோரி​யுள்​ளனர். இம்​மனு நீதிபதி நிஷா தாக்​கோர் முன்பு விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர்​கள் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் ஹரிசங்​கர் ஜெயின் ஆஜரா​னார்.

இவர், மசூ​தி​யின் கட்​டிடத்தை சமண-இந்து வழி​பாட்​டுத் தலமாக மறு​வகைப்​படுத்த வேண்​டும் என்​றும், சமண சமூகத்​தினர் அங்கு வழிபட அனு​ம​திக்க வேண்​டும் என்​றும் கோரி​னார். இவற்​றுக்கு ஆதா​ரங்​களாக வரலாற்று ஆவணங்​கள் மற்​றும் நூல்​களைச் சுட்டிக்​காட்​டி​யுள்​ளார். இவரது வாதத்​தைக் கேட்ட நீதிப​தி நிஷா தாக்கோர், ஆதா​ரங்​களை ஆய்வு செய்து உரிய அறி​வுறுத்​தல் வழங்​கும்​படி தொல்லியல் துறைக்கு உத்​தர​விட்​டார்.

SCROLL FOR NEXT