இந்தியா

தொகுதி மறுவரையறை மசோதாவில் அனைத்து மாநிலங்களுக்கும் 50% தொகுதிகள் அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல்

பாஜக அரசின் முடிவால் ஆதரவு அதிகரிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அனைத்து மாநிலங்​களி​லும் சரிசமமாக 50 சதவீதம் அளவுக்கு மக்களவைத் தொகுதிகளை அதி​கரிக்க மத்​திய அமைச்சரவை ஒப்​புதல் அளித்​துள்​ளது. பாஜக அரசின் இந்த முடிவால் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு பெருகிவரு​கிறது.

மகளிருக்​கான 33 சதவீத இடஒதுக்​கீட்டை அமல்​படுத்​து​வதற்​காக அரசி​யல் சாசன திருத்​தம் (131-வது திருத்​தம்) மசோதா 2026, தொகுதி மறு​வரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2026 ஆகிய 3 மசோதாக்​கள் கடந்த ஏப்​ரலில் மக்​களவை​யில் தாக்​கல் செய்​யப்​பட்​டன.

இந்த மசோதாக்​கள் மூலம் மக்​களவை தொகுதி​களின் எண்ணிக்கையை 543-ல் இருந்து 850 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டு இருந்​தது. அரசி​யலமைப்பு சட்டத் திருத்த மசோதாக்​கள் என்​ப​தால் இவற்றை நிறைவேற்ற மூன்​றில் இரண்டு பங்கு எம்​பிக்​களின் ஆதரவு தேவை. ஆனால் போதிய ஆதரவு கிடைக்​காததால் மசோதாக்​களை நிறைவேற்ற முடியவில்லை.

சிறப்பு கூட்​டத் தொடர்

இந்த சூழலில் நாடாளு​மன்​றத்​தின் சிறப்பு கூட்​டத் தொடர் நவம்பர் 30-ம் தேதி தொடங்கி டிசம்​பர் 3-ம் தேதி வரை நடை​பெறும் என்று அறி​விக்​கப்​பட்டு உள்​ளது. இதில் மகளிர் இடஒதுக்கீடு அமலாக்​கம் மற்​றும் மக்​களவை தொகுதி மறு​வரையறை தொடர்பான மசோதாக்​கள் தாக்​கல் செய்​யப்​படும் என்று எதிர்பார்க்​கப்​படு​கிறது.

இதை உறுதி செய்​யும் வகை​யில் பிரதமர் நரேந்​திர மோடி தலைமையில் மத்​திய அமைச்​சரவைக் கூட்​டம் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் அனைத்து மாநிலங்​களுக்​கும் சரிசமமாக 50 சதவீதம் அளவுக்கு மக்​களவைத் தொகுதி​களை அதி​கரிக்க ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது. இந்த முடிவால் பாஜக அரசுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

தொகுதி மறு​வரையறை ஆணை​யம்

இது​குறித்து மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: கடந்த 1971-ம் ஆண்டு மக்​கள் தொகை​யின் அடிப்​படை​யில் நாடாளு​மன்ற மக்களவை​யில் தற்​போது 543 இடங்​கள் உள்​ளன. இதைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு மக்​கள் தொகை கணக்​கெடுப்பு அடிப்படை​யில் மக்​களவைத் தொகுதி​களின் எண்​ணிக்​கையை 850 ஆக அதி​கரிக்க திட்​ட​மிடப்​பட்டு இருந்​தது. இதற்கு தென் மாநிலங்​கள் கடும் ஆட்​சேபம் தெரி​வித்​தன.

அனைத்து தென்​மாநிலங்​களி​லும் மக்​கள் தொகை கட்டுப்படுத்தப்​பட்டு உள்​ளன. எனவே மக்​கள் தொகை அடிப்​படை​யில் தொகுதி​களின் எண்​ணிக்​கையை அதி​கரித்​தால் தென்​மாநிலங்கள் பாதிக்​கப்​படும் என்று சுட்​டிக் காட்​டப்​பட்​டது. இதற்கு கடந்த ஏப்​ரல் மாத நாடாளு​மன்ற சிறப்பு கூட்​டத்​தொடரிலேயே மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தெளிவான விளக்​கம் அளித்​தார். அனைத்து மாநிலங்​களுக்​கும் ஒரே மாதி​ரியாக 50 சதவீத இடங்​கள் அதி​கரிக்​கப்​படும் என்று அவர் உறுதி அளித்​தார்.

இதன் அடிப்​படை​யில் தற்​போது மசோதாவில் திருத்​தம் செய்யப்பட்டு அனைத்து மாநிலங்​களி​லும் 50 சதவீதம் என்ற வகை​யில் மக்​களவைத் தொகுதி​களை அதி​கரிக்க மத்​திய அமைச்​சரவை ஒப்​புதல் அளித்​துள்​ளது. இதன்​படி நாடாளு​மன்ற மக்​களவைத் தொகுதி​களின் எண்​ணிக்கை 815 ஆக அதி​கரிக்​கும். இதில் 33 சதவீத இடங்​கள் மகளிருக்கு ஒதுக்​கீடு செய்​யப்​படும். வரும் 2051-ம் ஆண்டு வரை மக்​களவைத் தொகுதி​களின் எண்ணிக்​கை​யில் மாற்​றம் செய்​யப்​படாது.

நாடாளு​மன்​றத்​தில் மசோதா நிறைவேற்​றப்​பட்ட பிறகு தொகுதி மறு​வரையறை ஆணை​யம் அமைக்​கப்​படும். இந்த ஆணை​யம் நாடு முழு​வதும் மக்​களவை தொகுதி​களை மறு​வரையறை செய்யும். வரும் 2029-ம் ஆண்​டில் 815 மக்​களவைத் தொகுதிகளுக்கும் பொதுத்​தேர்​தல் நடை​பெறும். இவ்​வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரி​வித்​துள்​ளன.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT