இந்தியா

போதைப் பொருள் கடத்தலை தடுப்பது தொடர்பான பிரிக்ஸ் சிறப்பு மாநாடு இன்று தொடக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ​போதைப் பொருள் கடத்​தலை தடுப்​பது தொடர்​பான பிரிக்ஸ் கூட்​டமைப்​பின் 2 நாள் சிறப்பு மாநாடு குவாஹாட்​டி​யில் இன்று தொடங்​கு​கிறது.

பிரிக்ஸ் கூட்​டமைப்​பில் பிரேசில், ரஷ்​யா, இந்​தி​யா, சீனா, தென் ஆப்​பிரிக்​கா, எகிப்​து, எத்​தி​யோப்​பி​யா, ஈரான், ஐக்​கிய அரபு அமீரகம், இந்​தோ​னேசி​யா, சவுதி அரேபியா ஆகிய நாடு​கள் உறுப்​பினர்​களாக உள்​ளன. இந்த ஆண்​டுக்​கான பிரிக்ஸ் கூட்​டமைப்​பின் தலைமை பொறுப்பை இந்​தியா ஏற்​றிருக்​கிறது. இதன்​படி வரும் செப்​டம்​பர் 12, 13-ம் தேதி​களில் டெல்​லி​யில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடை​பெற உள்​ளது.

இதை முன்​னிட்டு பிரிக்ஸ் உறுப்பு நாடு​களின் வெளி​யுறவு அமைச்​சர்​கள், எரிசக்தி அமைச்​சர்​கள், விண்​வெளித் துறைகளின் தலை​வர்​கள், தேசிய பாது​காப்பு ஆலோ​சகர்​கள், சுற்றுச்சூழல் துறை அமைச்​சர்​கள் பங்​கேற்ற பல்​வேறு சிறப்பு மாநாடுகள் நடை​பெற்று உள்​ளன. இதன்​தொடர்ச்​சி​யாக பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடு​களின் போதைப் பொருள் தடுப்பு பிரிவு தலைவர்கள் பங்​கேற்​கும் 2 நாள் சிறப்பு மாநாடு அசாமின் குவாஹாட்டியில் இன்று தொடங்​கு​கிறது.

இந்த மாநாட்​டில் போதைப் பொருள் கடத்​தலை தடுப்​பது தொடர்பாக முக்​கிய ஆலோ​சனை​கள் நடத்​தப்பட உள்​ளன. சர்வதேச அளவி​லான போதைப் பொருள் கடத்​தலுக்கு கிரிப்​டோகரன்​ஸி​யில் பணப் பரிவர்த்​தனை நடை​பெறுகிறது. இந்த சட்ட​விரோத பணப் பரி​மாற்​றத்தை தடுப்​பது குறித்து மாநாட்​டில் பல்​வேறு வியூ​கங்​கள் வகுக்​கப்பட உள்​ளன.

டார்க் ​நெட் இணை​யதளங்​கள் வாயி​லாக போதைப் பொருள் கடத்தல் தொடர்​பான தகவல்​கள் பரி​மாறப்​ படு​கின்​றன. இந்த டார்க் ​நெட் இணை​ய தளங்​களை கண்​டறிய பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் ஒன்​றிணைந்து செயல்​படு​வது குறித்து மாநாட்​டில் ஆலோ​சனை நடத்​தப்பட உள்​ளது. மருந்து உற்​பத்தி துறை​யில் போதைக்​காக பல்​வேறு மருந்​துகள் தயாரிக்​கப்​படு​கின்​றன.

அவை தொடர்​பான தகவல்​களை உறுப்பு நாடு​கள் பரஸ்​பரம் பகிர்ந்து கொள்ள வேண்​டும். போதைப் பொருள் கும்​பல்​களின் சர்வ​தேச விநி​யோக சங்​கி​லியை உடைத்​தெறிய வேண்​டும் என்பன உள்​ளிட்ட பல்​வேறு விவ​காரங்​கள் குறித்து குவாஹாட்டி மா​நாட்​டில் முக்​கிய முடிவு​கள்​ எடுக்​கப்​பட உள்​ளன.

SCROLL FOR NEXT