இந்தியா

சோமாலியா கடற்கொள்ளையர்களிடம் இருந்து 20 மாலுமிகள் மீட்பு - இந்திய கடற்படையின் துணிச்சல் நடவடிக்கை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சோமாலியா கடற்​கொள்​ளை​யர்​களால் கடத்​தப்​பட்ட மீன்​பி​டிக் கப்​பலில் இருந்து 20 மாலுமிகளை இந்திய கடற்படை பத்​திர​மாக மீட்​டது.

ஈரான் நாட்​டுக்கு சொந்​த​மான ‘அசினி’ என்​கிற மீன்​பி​டிக் கப்​பல் கடந்த மாதம் 29-ம் தேதி சோமாலியாவின் வடகிழக்​குக் கடற்​கரைக்கு அப்​பால் சென்று கொண்​டிருந்​த​போது, ஆயுதம் ஏந்​திய கடற்​கொள்​ளை​யர்​கள் கப்​பலை வழிமறித்து கடத்​தினர். கப்​பலில் இருந்த 20 ஈரானிய மாலுமிகள் சிறை பிடிக்​கப்​பட்​டனர்.

இந்த சம்​பவம் கடல்​சார் பாது​காப்பு அச்​சுறுத்​தலை ஏற்​படுத்​தி​யதுடன், அப்​பகுதி வழி​யாக செல்​லும் பிற வர்த்​தகக் கப்​பல்​கள் மீது தாக்​குதல்​களை தொடுப்​ப​தற்கு கடற்​கொள்​ளை​யர்​கள் இந்த மீன்​பி​டிக் கப்​பலை பயன்​படுத்​தலாம் என்ற கவலை எழுந்​தது. இதனையடுத்து, கடத்​தப்​பட்ட மீன்​பிடி கப்​பலைக் கண்​காணிப்​ப​தற்​காக ஒரு போர்க்​கப்​பலை​யும், கடல்​சார் உளவு விமானத்​தையும் இந்​திய கடற்​படை களமிறக்​கியது.

தொடர் கண்​காணிப்​புக்​குப் பிறகு மீன்​பிடி கப்​பலின் இருப்​பிடத்​தைக் கண்​டறிந்த இந்​திய கடற்​படை​யினர், அதன் இயக்​கத்​தைக் கட்​டுப்​படுத்​தவும் கடற்​கொள்​ளை​யர்​கள் தப்​பிச் செல்​வதைத் தடுக்​கவும் நட​வடிக்கை எடுத்​தனர்.

அதனை தொடர்ந்து, கடற்​படை கமாண்​டோக்​கள் இந்​திய விமானப்​படை​யின் சி-17 விமானம் மூலம் சரியான நேரத்​தில் மீன்​பிடி கப்​பலில் இறங்​கினர். அவர்​கள், விரைவான மற்​றும் நன்கு ஒருங்​கிணைக்​கப்​பட்ட நட​வடிக்​கை​யின் மூலம் கொள்​ளை​யர்​களின் அச்​சுறுத்​தலை முறியடித்து, கப்​பலைப் பாது​காத்து, 20 மாலுமிகளை​யும் பாது​காப்​பாக மீட்​டனர்.

இது தொடர்​பாக இந்​திய கடற்​படை வெளி​யிட்​டுள்ள அறிக்கையில், “இந்த வெற்​றிகர​மான நட​வடிக்கை, இந்​தி​யக் கடற்படை​யின் உயர் செயல்​பாட்​டுத் தயார்​நிலைக்​கும், படைகளுக்கு இடையேயான ஒருங்​கிணைப்​பின் மூலம் சிக்கலான கடல்​சார் பாது​காப்பு நட​வடிக்​கைகளை மேற்கொள்ளும் திறனுக்​கும் ஒரு சான்​றாகும்.

மாலுமிகளைப் பாது​காப்​ப​தற்​கும், முக்​கிய கடல்​வழி வர்த்​தகப் பாதைகளைப் பாது​காப்​ப​தற்​கும், இந்​தி​யப் பெருங்​கடல் பிராந்​தி​யத்​தில் பாது​காப்​பான, உறுதி​யான மற்​றும் நிலை​யான கடல்​சார் சூழலை உறுதி செய்​வதற்​கும் இந்​தி​யக் கடற்​படை உறுதி​யுடன் உள்​ளது” என தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

வெற்​றிகர​மான இந்த நட​வடிக்​கையைத் தொடர்ந்து, டெல்​லி​யில் உள்ள ஈரான் தூதரகம், மீட்​புப் பணி​யின்​போது வெளிப்​படுத்​தப்​பட்ட துல்​லியம், படைப்​பி​ரிவு​களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்​றும் மனிதாபிமான அர்ப்​பணிப்பு ஆகிய​வற்றுக்காக இந்​திய ஆயுதப் படைகளுக்கு பாராட்டு மற்​றும் நன்றி தெரிவித்​தது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT