போபால்: மத்திய பிரதேச மாநிலம், பூசா கமல்பூர் கிராமத்தை சேர்ந்த இந்திரராஜ், தனது 19 மாத ஆண் குழந்தைக்கு லேசான சளி, இருமலுடன் கண்கள் சிவந்ததால் குழந்தையை பண்டாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
அங்கு குழந்தை நல மருத்துவர் ஹிமான்ஷு வர்மா குழந்தையை பரிசோதித்து விட்டு, கண்சொட்டு மருந்து, பாராசிட்டமால் மற்றும் பிற மருந்துகளை பரிந்துரைத்துள்ளார். ஆனால் ஊழியர்கள் தவறுதலாக, கண் சொட்டு மருந்துக்கு பதிலாக, இருமல் மருந்தை குழந்தையின் கண்களில் விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து குழந்தையின் நிலைமை மோசமடைந்ததால் போபால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை தனது கண் பார்வையை நிரந்தரமாக இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பண்டா காவல் நிலையத்தில் குழந்தையின் தந்தை புகார் அளித்துள்ளார்.