புல்வாமா: தெற்கு காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் பார்சூ கிராமத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய பாரதிய மஸ்தூர் சங்கம்(பிஎம்எஸ்), தனது முதல் அதிகாரப்பூர்வ அலுவலகத்தைத் திறந்துள்ளது. இது காஷ்மீர் பள்ளத்தாக்கில் சங்பரிவார் அமைப்புக்கு பொதுவெளியில் அமைந்துள்ள முதல் நிரந்தர முகவரியாகும்.
இதுகுறித்து, பிஎம்எஸ் அமைப்பின் காஷ்மீர் பொறுப்பாளர் சமீர் குச்சே கூறுகையில், “ஒவ்வொரு தொழிலாளரின் உரிமைகளையும், கண்ணியத்தையும் பாதுகாப்பதே எங்களது நோக்கம். நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழிலாளர்கள் 100 சதவீதப் பங்களிப்பை வழங்குகின்றனர்.
ஒரு தொழிலாளர் எங்கிருந்து வருகிறார் அல்லது எந்தக் கொள்கையைப் பின்பற்றுகிறார் என்பது குறித்து எங்களுக்குக் கவலையில்லை,’’ என்று தெரிவித்தார். சங் பரிவார் அமைப்புகளின் செல்வாக்கு பள்ளத்தாக்கில் விரிவடைந்து வருவதற்கு பிராந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.