நந்திகிராம் தொகுதி வெற்றியை கொண்டாடும் பாஜகவினர்
புதுடெல்லி: மேற்கு வங்கத்தின் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், அசாமின் ஒரு மக்களவை தொகுதிக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
தமிழகத்தின் மதுராந்தகம், தாராபுரம், புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி, மேற்கு வங்கத்தின் ரெஜிநகர், நந்திகிராம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், அசாமின் நாகோன் மக்களவை தொகுதிக்கும் கடந்த 6-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.
தட்டாஞ்சாவடியில் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அஷோக் ஆனந்த் 13,358 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் காங்கிரஸ் வேட்பாளர் விநாயகத்தை 8,482 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
தாராபுரத்தில் தவெக வெற்றி பெற்றுள்ள நிலையில், மதுராந்தகத்திலும் அக்கட்சி வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. இங்கு தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
மேற்கு வங்கத்தில் இரண்டு தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ரெஜிநகர் பாஜக வேட்பாளர் ஷங்கராவ் சர்கார் 1,29,914 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் மம்தா பானர்ஜியின் மமதா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆம் ஜனதா உன்னயான் கட்சியின் குலாம் நபி ஆசாத் சுமார் 54,098 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
நந்திகிராமில் பாஜக வேட்பாளர் ஹசி ராணி ரத் 1 லட்சத்து 22 ஆயிரத்து 753 வாக்குகள் வித்தியாசத்தில் இவர் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதான் 41 ஆயிரத்து 674 வக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். ரெஜிநகர், நந்திகிராம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
அசாமின் நகோன் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் தேவசிஷ் சர்மா 1 லட்சத்து 66 ஆயிரத்து 134 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் முகம்மது பத்ருதின் அஜ்மால் 5 லட்சத்து 20 ஆயிரத்து 976 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சிபாமணி போரா 1 லட்சத்து 22 ஆயிரத்து 941 வாக்களைப் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.